அகநானூறு
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   383
Zoom In NormalZoom Out


 
வெண்மழை
வான்தோய் உயர்வரை ஆடும் வைகறை,
புதல்ஒளி சிறந்த காண்புஇன் காலை,
தண்நறும் படுநீர் மாந்தி, பதவுஅருந்து
வெண்புறக்கு உடைய திரிமருப்பு இரலை;
வார்மணல் ஒருசிறைப் பிடவுஅவிழ் கொழுநிழல்,
காமர் துணையொடு ஏமுற வதிய;
அரக்குநிற உருவின் ஈயல் மூதாய்
பரப்பி யவைபோற் பாஅய், பலஉடன்
நீர்வார் மருங்கின் ஈரணி திகழ;
இன்னும் வாரார் ஆயின்-நன்னுதல்!
யாதுகொல் மற்றுஅவர் நிலையே? காதலர்
கருவிக் கார்இடி இரீஇய
பருவம் அன்று, அவர், 'வருதும்' என்றதுவே. 
 

என்பது  பிரிவிடை  மெலிந்த  தலைமகள் தோழிக்குச் சொல்லியது. -
இடைக்காடனார் இப்பாட்டுத் தொழிலார் பாலையாயிற்று
 

பெருங்கடல் வேட்டத்துச் சிறுகுடிப் பரதவர்
இருங்கழிச் செறுவின் உழாஅது செய்த
வெண்கல் உப்பின் கொள்ளை சாற்றி,
என்றூழ் விடர குன்றம் போகும்
கதழ்கோல் உமணர் காதல் மடமகள்
சில்கோல் எல்வளை தெளிர்ப்ப வீசி,
'நெல்லின் நேரே வெண்கல் உப்பு' எனச்
சேரி விலைமாறு கூறலின், மனைய
விளிஅறி ஞமலி குரைப்ப, வெரீஇய
மதர்கயல் மலைப்பின் அன்னகண் எமக்கு,
இதைமுயல் புனவன் புகைநிழல் கடுக்கும்
மாமூது அள்ளல் அழுந்திய சாகாட்டு
எவ்வம் தீர வாங்கும் தந்தை
கைபூண் பகட்டின் வருந்தி,
வெய்ய உயிர்க்கும் நோய்ஆ கின்றே. 
 

என்பது  இயற்கைப்  புணர்ச்சி புணர்ந்து நீங்கும் தலைமகன் பாங்கற்கு
உரைத்தது.- அம்மூவனார்
 

 
அம்ம வாழி, தோழி! கைம்மிகக்
கனவும் கங்குல்தோறு இனிய; நனவும்
புனைவினை நல்இல் புள்ளும் பாங்கின;
நெஞ்சும் நனிபுகன்று உறையும்; எஞ்சாது
உலகுதொழில் உலந்து, நாஞ்சில் துஞ்சி,
மழைகால் நீங்கிய மாக விசும்பில்
குறுமுயல் மறுநிறம் கிளர, மதிநிறைந்து,
அறுமீன் சேரும் அகல்இருள் நடுநாள்;
மறுகுவிளக் குறுத்து, மாலை தூக்கி,
பழவிறல் மூதூர்ப் பலருடன் துவன்றிய
விழவுஉடன் அயர, வருகதில் அம்ம!-
துவரப் புலர்ந்து தூமலர் கஞலி,
தகரம் நாறும் தண்நறுங் கதுப்பின்
புதுமண மகடூஉ அயினிய கடிநகர்ப்
பல்கோட்டு அடுப்பில் பால்உலை இரீஇ,
கூழைக் கூந்தற் குறுந்தொடி மகளிர்
பெருஞ்செய் நெல்லின் வாங்குகதிர் முறித்து,
பாசவல் இடிக்கும் இருங்காழ் உலக்கைக்