அகநானூறு
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   384
Zoom In NormalZoom Out


 
கடிதுஇடி வெரீஇய கமஞ்சூல் வெண்குருகு
தீம்குலை வாழை ஓங்குமடல் இராது;
நெடுங்கால் மாஅத்துக் குறும்பறை பயிற்றும்
செல்குடி நிறுத்த பெரும்பெயர்க் கரிகால்
வெல்போர்ச் சோழன் இடையாற்று அன்ன
நல்இசை வெறுக்கை தருமார், பல்பொறிப்
புலிக்கேழ் உற்ற பூவிடைப் பெருஞ்சினை
நரந்த நறும்பூ நாள்மலர் உதிர,
கலைபாய்ந்து உகளும், கல்சேர் வேங்கை,
தேம்கமழ் நெடுவரைப் பிறங்கிய
வேங்கட வைப்பிற் சுரன் இறந் தோரே. 
 

இது 'பிரிவிடை ஆற்றாள்' எனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது.
- நக்கீரர்
 

 
இலமலர் அன்ன அம்செந் நாவின்
புலம்மீக் கூறும் புரையோர் ஏத்த,
பலர்மேந் தோன்றிய கவிகை வள்ளல்
நிறைஅருந் தானை வெல்போர் மாந்தரம் -
பொறையன் கடுங்கோப் பாடிச் சென்ற
குறையோர் கொள்கலம் போல, நன்றும்
உவஇனி-வாழிய, நெஞ்சே!-காதலி
முறையின் வழாஅது ஆற்றிப் பெற்ற
கறைஅடி யானை நன்னன் பாழி,
ஊட்டுஅரு மரபின் அஞ்சுவரு பேஎய்க்
கூட்டுஎதிர் கொண்ட வாய்மொழி மிஞிலி,
புள்ளிற்கு ஏமம் ஆகிய பெரும்பெயர்
வெள்ளத் தானை அதிகற் கொன்று, உவந்து
ஒள்வாள் அமலை ஆடிய ஞாட்பின்,
பலர் அறிவுறுதல் அஞ்சி, பைப்பய,
நீர்த்திரள் கடுக்கும் மாசுஇல் வெள்ளிச்
சூர்ப்புறு கோல்வளை செறித்த முன்கை-
குறைஅறல் அன்ன இரும்பல் கூந்தல்,
இடன்இல் சிறுபுறத்து இழையொடு துயல்வர,
கடல்மீன் துஞ்சும் நள்ளென் யாமத்து,
உருவுகிளர் ஓவினைப் பொலிந்த பாவை
இயல்கற் றன்ன ஒதுக்கினள் வந்து,
பெயல்அலைக் கலங்கிய மலைப்பூங் கோதை
இயல்எறி பொன்னின் கொங்குசோர்பு உறைப்ப,
தொடிக்கண் வடுக்கொள-முயங்கினள்;
வடிப்புஉறு நரம்பின் தீவிய மொழிந்தே. 
 

இது இரவுக்குறி வந்து நீங்கும் தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது.
- பரணர்
 

 
செய்வினைப் பிரிதல் எண்ணி, கைம்மிகக்
காடுகவின் ஒழியக் கடுங்கதிர் தெறுதலின்,
நீடுசினை வறிய ஆக, ஒல்லென
வாடுபல் அகல்இலை கோடைக்கு ஒய்யும்
தேக்குஅமல் அடுக்கத்து ஆங்கண் மேக்குஎழுபு,
முளிஅரிற் பிறந்த வளி