அகநானூறு
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   385
Zoom In NormalZoom Out


 
வளர் கூர்எரிச்
சுடர்நிமிர் நெடுங்கொடி விடர்முகை முழங்கும்
'வெம்மலை அருஞ்சுரம் நீந்தி-ஐய!
சேறும்' என்ற சிறுசொற்கு-இவட்கே,
வசைஇல் வெம்போர் வானவன் மறவன்
நசையின் வாழ்நர்க்கு நன்கலம் சுரக்கும்,
பொய்யா வாய்வாள், புனைகழல், பிட்டன்
மைதவழ் உயர்சிமைக் குதிரைக் கவாஅன்
அகலஅறை நெடுஞ்சுனை, துவலையின் மலர்ந்த
தண்கமழ் நீலம் போல,
கண்பனி கலுழ்ந்தன; நோகோ யானே. 
 

இது பொருள்வயிற் பிரியக் கருதிய தலைமகனை, தோழி, தலைமகளது
ஆற்றாமை கண்டு, செலவு அழுங்குவித்தது. - ஆலம்பேரி சாத்தனார்
 

 
''வருதும்'' என்ற நாளும் பொய்த்தன;
அரிஏர் உண்கண் நீரும் நில்லா;
தண்கார்க்கு ஈன்ற பைங்கொடி முல்லை
வைவாய் வால்முகை அவிழ்ந்த கோதை
பெய்வனப்பு இழந்த கதுப்பும் உள்ளார்,
அருள்கண் மாறலோ மாறுக-அந்தில்
அறன்அஞ் சலரே! - ஆயிழை!-நமர்' எனச்
சிறிய சொல்லிப் பெரிய புலப்பினும்,
பனிபடு நறுந்தார் குழைய, நம்மொடு,
துனிதீர் முயக்கம் பெற்றோள் போல
உவக்குநள்-வாழிய, நெஞ்சே!-விசும்பின்
ஏறுஎழுந்து முழங்கினும் மாறுஎழுந்து சிலைக்கும்
கடாஅ யானை கொட்கும் பாசறை,
போர்வேட்டு எழுந்த மள்ளர் கையதை
கூர்வாட் குவிமுகம் சிதைய நூறி,
மான்அடி மருங்கில் பெயர்த்த குருதி
வான மீனின் வயின்வயின் இமைப்ப,
அமர்ஓர்த்து, அட்ட செல்வம்
தமர்விரைந்து உரைப்பக் கேட்கும் ஞான்றே. 
 

இது  வினை  முற்றிய  தலைமகன்  தன் நெஞ்சிற்குச் உரைப்பானாய்,
பாகற்குச்   சொல்லியது.  -  மதுரை  அளக்கர்  ஞாழலார்  மகனார்
மள்ளனார்.
 

 
வேர்முழுது உலறி நின்ற புழற்கால்,
தேர்மணி இசையின் சிள்வீடு ஆர்க்கும்,
வற்றல் மரத்த பொன்தலை ஓதி
வெயிற்கவின் இழந்த வைப்பின் பையுள்கொள,
நுண்ணிதின் நிவக்கும் வெண்ஞெமை வியன்காட்டு
ஆள்இல் அத்தத்து, அளியள் அவனொடு-
வாள்வரி பொருத புண்கூர் யானை
புகர்சிதை முகத்த குருதி வார,
உயர்சிமை நெடுங்கோட்டு உரும் என முழங்கும்
'அருஞ்சுரம் இறந்தனள்' என்ப-பெருஞ்சீர்
அன்னி குறுக்கைப் பறந்தலை, திதியன்
தொல்நிலை முழுமுதல் துமியப் பண்ணிய
நன்னர் மெல்இணர்ப் புன்னைபோல,
கடுநவைப் படீஇயர்மாதோ-களி