|
மயில் குஞ்சரக் குரல குருகோடு ஆலும், துஞ்சா முழவின், துய்த்துஇயல் வாழ்க்கை, கூழுடைத் தந்தை இடனுடை வரைப்பின், ஊழ்அடி ஒதுங்கினும் உயங்கும் ஐம்பாற் சிறுபல் கூந்தற் போதுபிடித்து அருளாது, எறிகோல் சிதைய நூறவும், சிறுபுறம், 'எனக்கு உரித்து' என்னாள், நின்றஎன் அமர்க்கண் அஞ்ஞையை அலைத்த கையே!
மகட்போக்கிய செவிலித்தாய் சொல்லியது. - கயமனார்
வலிமிகு முன்பின் அண்ணல் ஏஎறு பனிமலர்ப் பொய்கைப் பகல்செல மறுகி, மடக்கண் எருமை மாண்நாகு தழீஇ, படப்பை நண்ணி, பழனத்து அல்கும் கலிமகிழ் ஊரன் ஒலிமணி நெடுந்தேர், ஒள்இழை மகளிர் சேரி, பல்நாள் இயங்கல் ஆனாது ஆயின்; வயங்கிழை யார்கொல் அளியள்தானே எம்போல் மாயப் பரத்தன் வாய்மொழி நம்பி, வளிபொரத் துயல்வரும் தளிபொழி மலரின் கண்பனி ஆகத்து உறைப்ப, கண்பசந்து, ஆயமும் அயலும் மருள, தாய்ஓம்பு ஆய்நலம் வேண்டா தோளே?
வாயில் வேண்டிச்
சென்ற பாணற்குத் தலைமகள் வாயில் மறுத்தது.-
உவர்க்கண்ணூர்ப் புல்லங்கீரனார்.
ஓங்குமலைச் சிலம்பில் பிடவுடன் மலர்ந்த வேங்கை வெறித்தழை வேறுவகுத் தன்ன ஊன்பொதி அவிழாக் கோட்டுஉகிர்க் குருளை மூன்று உடன் ஈன்ற முடங்கர் நிழத்த, துறுகல் விடர்அளைப் பிணவுப் பசி கூர்ந்தென, பொறிகிளர் உழுவைப் போழ்வாய் ஏற்றை அறுகோட்டு உழைமான் ஆண்குரல் ஓர்க்கும் நெறிபடு கவலை நிரம்பா நீளிடை, வெள்ளி வீதியைப் போல நன்றும் செலவுஅயர்ந் திசினால் யானே; பலபுலந்து, உண்ணா உயக்கமொடு உயிர்செலச் சாஅய், தோளும் தொல்கவின் தொலைய, நாளும் பிரிந்தோர் பெயர்வுக்கு இரங்கி, மருந்துபிறிது இன்மையின், இருந்துவினை இலனே!
என்பது செலவு
உணர்த்திய தோழிக்குத் தலைமகள் சொல்லியது. -
ஒளவையார்
பனைத்திரள் அன்ன பருஏர் எறுழ்த் தடக்கை, கொலைச்சினம் தவிரா மதனுடை முன்பின், வண்டுபடு கடாஅத்து, உயர்மருப்பு, யானை தண்கமழ் சிலம்பின் மரம்படத் தொலைச்சி; உறுபுலி உரறக் குத்தி; விறல்கடிந்து; சிறுதினைப் பெரும்புனம் வவ்வும் நாட! கடும்பரிக் குதிரை ஆஅய் எயினன் நெடுந்தேர் ஞிமிலியொடு பொருது, களம் பட்டென,
|