அகநானூறு
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   387
Zoom In NormalZoom Out


 
காணிய செல்லாக் கூகை நாணி,
கடும்பகல் வழங்கா தாஅங்கு, இடும்பை
பெரிதால் அம்ம இவட்கே; அதனால்
மாலை, வருதல் வேண்டும்-சோலை
முளைமேய் பெருங்களிறு வழங்கும்
மலைமுதல் அடுக்கத்த சிறுகல் ஆறே.
 

பகல் வருவானை 'இரவு வருக' என்றது. - பரணர்
 

 
சிறுபுன் சிதலை சேண்முயன்று எடுத்த
நெடுஞ்செம் புற்றத்து ஒடுங்குஇரை முனையின்,
புல்அரை இருப்பைத் தொள்ளை வான்பூப்
பெருங்கை எண்கின் இருங்கிளை கவரும்
அத்த நீள்இடைப் போகி, நன்றும்
அரிதுசெய் விழுப்பொருள் எளிதினின் பெறினும்
வாரேன்-வாழி, என் நெஞ்சே!-சேரலர்
சுள்ளிஅம் பேரியாற்று வெண்நுரை கலங்க,
யவனர் தந்த வினைமாண் நன்கலம்
பொன்னொடு வந்து கறியொடு பெயரும்
வளம்கெழு முசிறி ஆர்ப்புஎழ வளைஇ,
அருஞ்சமம் கடந்து, படிமம் வவ்விய
நெடுநல் யானை அடுபோர்ச் செழியன்
கொடிநுடங்கு மறுகின் கூடற் குடாஅது,
பல்பொறி மஞ்ஞை வெல்கொடி உயரிய,
ஒடியா விழவின், நெடியோன் குன்றத்து,
வண்டுபட நீடிய குண்டுசுனை நீலத்து
எதிர்மலர்ப் பிணையல் அன்னஇவள்
அரிமதர் மழைக்கண் தெண்பனி கொளவே.
 

தலைமகன்   தன்   நெஞ்சிற்குச்  சொல்லிச்  செலவு  அழுங்கியது.-
எருக்காட்டூர்த் தாயங்கண்ணனார்
 

 
பின்னுவிட நெறித்த கூந்தலும், பொன்னென
ஆகத்து அரும்பிய சுணங்கும், வம்புவிடக்
கண்உருத்து எழுதரு முலையும், நோக்கி;
'எல்லினை பெரிது' எனப் பல்மாண் கூறி,
பெருந்தோள் அடைய முயங்கி, நீடுநினைந்து,
அருங்கடிப் படுத்தனள் யாயே; கடுஞ்செலல்
வாட்சுறா வழங்கும் வளைமேய் பெருந்துறை,
கனைத்த நெய்தற் கண்போல் மாமலர்
நனைத்த செருந்திப் போதுவாய் அவிழ,
மாலை மணிஇதழ் கூம்ப, காலைக்
கள்நாறு காவியொடு தண்ணென மலரும்
கழியும், கானலும், காண்தொறும் பலபுலந்து;
'வாரார்கொல்?' எனப் பருவரும் -
தாரார் மார்ப! நீ தணந்த ஞான்றே! 
 

என்பது  பகற்குறி  வந்து  கண்ணுற்று நீங்கும் தலைமகனைத் தோழி,
தலைமகளை  இடத்து  உய்த்து  வந்து,  செறிப்பு அறிவுறீஇ, வரைவு
கடாயது. - குறுவழுதியார்
 

 
'தம் நயந்து உறைவோர்த் தாங்கி, தாம்நயந்து