| இன்அமர் கேளிரொடு ஏமுறக் கெழீஇ, நகுதல் ஆற்றார் நல்கூர்ந் தோர்!' என, மிகுபொருள் நினையும் நெஞ்சமொடு அருள்பிறிது ஆபமன் - வாழி, தோழி! கால்விரிபு உறுவளி எறிதொறும் கலங்கிய பொறிவரிக் கலைமான் தலையின் முதல்முதற் கவர்த்த கோடல்அம் கவட்ட குறுங்கால் உழுஞ்சில் தாறுசினை விளைந்த நெற்றம், ஆடுமகள் அரிக்கோற் பறையின், ஐயென ஒலிக்கும் பதுக்கைத்து ஆய செதுக்கை நீழல், கள்ளி முள்அரைப் பொருந்தி, செல்லுநர்க்கு உறுவது கூறும், சிறுசெந் நாவின் மணிஓர்த் தன்ன தெண்குரல் கணிவாய், பல்லிய காடுஇறந் தோரே! எது |
|
தலைமகன்
பிரிவின்கண் வேறுபட்ட தலைமகள்
சொல்லியது.-
காவன்முல்லைப் பூதரத்தனார்.
|
| நெஞ்சு நடுங்கு அரும்படர் தீர வந்து, குன்றுழை நண்ணிய சீறூர் ஆங்கண் செலீஇய பெயர்வோள் வணர்சுரி ஐம்பால்- நுண்கோல் அகவுநர்ப் புரந்த பேர்இசை, சினம்கெழு தானை, தித்தன் வெளியன், இரங்குநீர்ப் பரப்பின் கானல்அம் பெருந்துறை, தனம்தரு நன்கலம் சிதையத் தாக்கும் சிறுவெள் இறவின் குப்பை அன்ன உறுபகை தரூஉம் மொய்ம்மூசு பிண்டன் முனைமுரண் உடையக் கடந்த வென்வேல், இசைநல் ஈகைக் களிறுவீசு வண்மகிழ், பாரத்துத் தலைவன், ஆர நன்னன்; ஏழில் நெடுவரைப் பாழிச் சிலம்பில் களிமயிற் கலாவத் தன்ன. தோளே- வல்வில் இளையர் பெருமகன்; நள்ளி சோலை அடுக்கத்துச் சுரும்பு உண விரிந்த கடவுட் காந்தளுள்ளும், பல உடன் இறும்பூது கஞலிய ஆய்மலர் நாறி, வல்லினும், வல்லார் ஆயினும், சென்றோர்க்குச் சால்அவிழ் நெடுங்குழி நிறைய வீசும், மாஅல் யானை ஆஅய் கானத்துத் தலையாற்று நிலைஇய சேயுயர் பிறங்கல் வேய்அமைக் கண்இடை புரைஇ, சேய ஆயினும், நடுங்குதுயர் தருமே. |
|
இரவுக்குறி வந்து
நீங்கும் தலைமகன் தன் நெஞ்சிற்குச்
சொல்லியது.-
பரணர்
|
| நோகோ யானே; நோதகும் உள்ளம்; அம்தீம் கிளவி ஆயமொடு கெழீஇ, பந்துவழிப் படர்குவள் ஆயினும், நொந்துநனி, வெம்பும்மன், அளியள் |
|  |