| தானே-இனியே, வன்க ணாளன் மார்புஉற வளைஇ, இன்சொற் பிணிப்ப நம்பி, நம்கண் உறுதரு விழுமம் உள்ளாள், ஒய்யெனத் தெறுகதிர் உலைஇய வேனில் வெங்காட்டு, உறுவளி ஒலிகழைக் கண்உறுபு தீண்டலின், பொறிபிதிர்பு எடுத்த பொங்குஎழு கூர்எரிப் பைதுஅறு சிமையப் பயம்நீங்கு ஆர்இடை நல்அடிக்கு அமைந்த அல்ல; மெல்இயல் வல்லுநள் கொல்லோ தானே-எல்லி ஓங்குவரை அடுக்கத்து உயர்ந்த சென்னி மீனொடு பொலிந்த வானின் தோன்றி, தேம்பாய்ந்து ஆர்க்கும் தெரிஇணர்க் கோங்கின் கால்உறக் கழன்ற கள்கமழ் புதுமலர் கைவிடு சுடரின் தோன்றும் மைபடு மாமலை விலங்கிய சுரனே? |
|
இது மகட்
போக்கிய செவிலித்தாய் சொற்றது. -
சேரமான்
இளங்குட்டுவன்.
|
| படுமழை பொழிந்த பயம்மிகு புறவின் நெடுநீர் அவல பகுவாய்த் தேரை சிறுபல் இயத்தின் நெடுநெறிக் கறங்க, குறும்புதற் பிடவின் நெடுங்கால் அலரி செந்நில மருங்கின் நுண்அயிர் வரிப்ப, வெஞ்சின அரவின் பை அணந் தன்ன தண்கமழ் கோடல் தாதுபிணி அவிழ, திரிமருப்பு இரலை தெள்அறல் பருகிக் காமர் துணையொடு ஏமுற வதிய, காடுகவின் பெற்ற தண்பதப் பெருவழி; ஓடுபரி மெலியாக் கொய்சுவற் புரவித் தாள்தாழ் தார்மணி தயங்குபு இயம்ப ஊர்மதி - வலவ! தேரே - சீர்மிகுபு நம்வயிற் புரிந்த கொள்கை அம்மா அரிவையைத் துன்னுகம், விரைந்தே. |
|
|
இது வினை
முற்றிய தலைமகன் தேர்ப்பாகற்குச்
சொல்லியது. -
பொதும்பிற் புல்லாளங்கண்ணியார்.
|
| ‘அறன்கடைப் படாஅ வாழ்க்கையும், என்றும் பிறன்கடைச் செலாஅச் செல்வமும், இரண்டும் பொருளின் ஆகும், புனையிழை!' என்று, நம் இருள்ஏர் ஐம்பால் நீவி யோரே- நோய்நாம் உழக்குவம்ஆயினும், தாம்தம் செய்வினை முடிக்க; தோழி! பல்வயின் பயநிரை சேர்ந்த பாழ்நாட்டு ஆங்கண் நெடுவிளிக் கோவலர் கூவல் தோண்டிய கொடுவாய்ப் |
|  |