| பத்தல்வார்ந்து உகு சிறுகுழி, நீர்காய் வருத்தமொடு சேர்விடம் பெறாது பெருங்களிறு மிதித்த அடியகத்து, இரும்புலி ஒதுங்குவன கழிந்த செதும்பல் ஈர்வழி, செயிர்தீர் நாவின் வயிரியர் பின்றை மண்ஆர் முழவின் கண்ணகத்து அசைத்த விரல்ஊன்று வடுவின் தோன்றும் மரல்வாடு மருங்கின் மலைஇறந் தோரே. |
|
இது தலைமகன்
பிரிவின்கண் வேறுபட்ட தலைமகள்
சொல்லியது.-
பாலை பாடிய பெருங்கடுங்கோ.
|
| முரசுடைச் செல்வர் புரவிச் சூட்டும் மூட்டுறு கவரி தூக்கி யன்ன, செழுஞ்செய் நெல்லின் சேயரிப் புனிற்றுக்கதிர் மூதா தின்றல் அஞ்சி, காவலர் பாகல் ஆய்கொடிப் பகன்றையொடு பரீஇ, காஞ்சியின் அகத்து, கரும்புஅருத்தி, யாக்கும் தீம்புனல் ஊர! திறவ தாகக் குவளை உண்கண் இவளும் யானும் கழனி ஆம்பல் முழுநெறிப் பைந்தழை, காயா ஞாயிற் றாக, தலைப்பெய, 'பொய்தல் ஆடிப் பொலிக!' எனவந்து, நின்நகாப் பிழைத்த தவறோ - பெரும! கள்ளும் கண்ணியும் கையுறை யாக நிலைக்கோட்டு வெள்ளை நால்செவிக் கிடாஅய் நிலைத்துறைக் கடவுட்கு உளப்பட ஓச்சி, தணிமருங்கு அறியாள், யாய்அழ, மணிமருள் மேனி பொன்நிறம் கொளலே? எது |
|
தலைமகளை இடத்து
உய்த்துவந்த தோழி தலைமகனை வரைவு
கடாயது.- ஆவூர் மூலங்கிழார்.
|
| அரியற் பெண்டிர் அல்கிற் கொண்ட பகுவாய்ப் பாளைக் குவிமுலை சுரந்த அரிநிறக் கலுழி ஆர மாந்தி, செருவேட்டு, சிலைக்கும் செங்கண் ஆடவர், வில்இட வீழ்ந்தோர் பதுக்கை, கோங்கின் எல்லி மலர்ந்த பைங்கொடி அதிரல் பெரும்புலர் வைகறை அரும்பொடு வாங்கி, கான யானை கவளம் கொள்ளும் அஞ்சுவரு நெறியிடைத் தமியர் செல்மார் நெஞ்சுஉண மொழிப மன்னே - தோழி! முனைபுலம் பெயர்த்த புல்லென் மன்றத்து, பெயல்உற நெகிழ்ந்து, வெயில்உறச் சாஅய், வினை |
|  |