அகநானூறு
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   391
Zoom In NormalZoom Out


 
அழி பாவையின் உலறி,
மனைஒழிந் திருத்தல் வல்லு வோர்க்கே! 
 

இது  பிரிவு  உணர்த்திய  தோழிக்குத்  தலைமகள்   சொல்லியது. -
வேம்பற்றூர்க் குமரனார்
 

 
'உரும்உரறு கருவிய பெருமழை தலைஇப்
பெயல் ஆன்று அவிந்த தூங்குஇருள் நடுநாள்,
மின்னு நிமிர்ந்தன்ன கனங்குழை இமைப்ப,
பின்னுவிடு நெறியின் கிளைஇய கூந்தலள்,
வரைஇழி மயிலின் ஒல்குவனள் ஒதுங்கி,
மிடைஊர்பு இழிய, கண்டனென், இவள்' என
'அறம்தலைப் பிரியாது ஒழுகலும், சிறந்த
கேளிர் கேடுபல ஊன்றலும், நாளும்
வருந்தா உள்ளமொடு இருந்தோர்க்கு இல்' எனச்
செய்வினை புரிந்த நெஞ்சினர், 'நறு நுதல்
மைஈர் ஓதி! அரும்படர் உழத்தல்
சில்நாள் தாங்கல் வேண்டும்' என்று, நின்
நல்மாண் எல்வளை திருத்தினர் ஆயின்,
வருவர் - வாழி, தோழி!- பலபுரி
வார்கயிற்று ஒழுகை நோன்சுவற் கொளீஇ,
பகடுதுறை ஏற்றத்து உமண்விளி வெரீஇ,
உழைமான் அம்பிணை இனன் இரிந்து ஓட,
காடுகவின் அழிய உரைஇ, கோடை
நின்றுதின விளிந்த அம்பணை, நெடுவேய்க்
கண்விடத் தெறிக்கும் மண்ணா முத்தம்
கழங்குஉறழ் தோன்றல, பழங்குழித் தாஅம்
இன்களி நறவின் இயல்தேர் நன்னன்
விண்பொரு நெடுவரைக் கவாஅன்
பொன்படு மருங்கின் மலைஇறந்தோரே. 
 

இது  தலைமகன்  பிரிவின்கண்  வேறுபட்ட  தலைமகளைத்  தோழி
வற்புறுத்தியது. -முள்ளியூர்ப் பூதியார்.
 

 
'இருபெரு வேந்தர் மாறுகொள் வியன்களத்து,
ஒருபடை கொண்டு, வருபடை பெயர்க்கும்
செல்வம் உடையோர்க்கு நின்றன்று விறல்' என,
பூக்கோள் ஏய தண்ணுமை விலக்கிச்
செல்வேம் ஆதல் அறியாள், முல்லை
நேர்கால் முதுகொடி குழைப்ப, நீர்சொரிந்து,
காலை வானத்துக் கடுங்குரற் கொண்மூ
முழங்குதொறும் கையற்று, ஒடுங்கி, நப்புலந்து,
பழங்கண் கொண்ட பசலை மேனியள்,
யாங்குஆ குவள்கொல் தானே-வேங்கை
ஊழுறு நறுவீ கடுப்பக் கேழ்கொள,
ஆகத்து அரும்பிய மாசுஅறு சுணங்கினள்,