| நல்மணல் வியலிடை நடந்த சில்மெல் ஒதுக்கின், மாஅ யோளே? |
|
என்பது பாசறைக்கண்
தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. -
மதுரை அளக்கர்ஞாழார் மகனார் - மள்ளனார்.
|
| வீங்கு விளிம்பு உரீஇய விசைஅமை நோன்சிலை வாங்குதொடை பிழையா வன்கண் ஆடவர் விடுதொறும் விளிக்கும் வெவ்வாய் வாளி ஆறுசெல் வம்பலர் உயிர்செலப் பெயர்ப்பின், பாறுகிளை பயிர்ந்து படுமுடை கவரும் வெஞ்சுரம் இறந்த காதலர் நெஞ்சுஉண அரிய வஞ்சினம் சொல்லியும், பல்மாண் தெரிவளை முன்கை பற்றியும், 'வினைமுடித்து வருதும்' என்றனர் அன்றே தோழி! கால்இயல் நெடுந்தேர்க் கைவண் செழியன் ஆலங் கானத்து அமர்கடந்து உயர்த்த வேலினும் பல்ஊழ் மின்னி, முரசுஎன மாஇரு விசும்பில் கடிஇடி பயிற்றி, நேர்கதிர் நிரைத்த நேமிஅம் செல்வன் போர்அடங்கு அகலம் பொருந்திய தார்போல், திருவில் தேஎத்துக் குலைஇ, உருகெழு மண்பயம் பூப்பப் பாஅய், தண்பெயல் எழிலி தாழ்ந்த போழ்தே? |
|
என்பது பிரிவின்கண் வற்புறுத்தும் தோழிக்குத் தலைமகள் சொல்லியது;
தோழிக்குத் தலைமகள் சொல்லியதூஉம் ஆம்; பிரிவின்கண் வேறுபட்ட
தலைமகள் தோழிக்குச் சொற்றதூஉம் ஆம்.- ஆலம்பேரி சாத்தனார்.
|
| கடல்கண்ட ன்ன கண்அகன் பரப்பின் நிலம்பக வீழ்ந்த வேர்முதிர் கிழங்கின் கழைகண் டன்ன தூம்புடைத் திரள்கால், களிற்றுச்செவி அன்ன பாசடை மருங்கில், கழு நிவந் தன்ன கொழுமுகை இடைஇடை முறுவல் முகத்தின் பல்மலர் தயங்க, பூத்த தாமரைப் புள்இமிழ் பழனத்து, வேப்புநனை அன்ன நெடுங்கண் நீர்ஞெண்டு இரைதேர் வெண்குருகு அஞ்சி, அயலது ஒலித்த பகன்றை இருஞ்சேற்று அள்ளல், திதலையின் வரிப்பஓடி, விரைந்து தன் நீர்மலி மண்அளைச் செறியும் ஊர! மனைநகு வயலை மரன்இவர் கொழுங்கொடி அரிமலர் ஆம்பலொடு ஆர்தழை தைஇ, விழவு ஆடு மகளிரொடு தழூஉ அணிப் பொலிந்து, மலர்ஏர் உண்கண் மாண்இழை முன்கைக் குறுந்தொடி துடக்கிய நெடுந்தொடர் விடுத்தது உடன்றனள் போலும், நின்காதலி? எம்போல் புல்உளைக் குடுமிப் புதல்வற் பயந்து, நெல்லுடை நெடுநகர் நின்இன்று உறைய, என்ன கடத்தளோ, மற்றே? தன்முகத்து எழுதுஎழில் சிதைய |
|  |