அகநானூறு
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   393
Zoom In NormalZoom Out


 
அழுதனள் ஏங்கி,
அடித்தென உருத்த தித்திப் பல்ஊழ்
நொடித்தெனச் சிவந்த மெல்விரல் திருகுபு,
கூர்நுனை மழுகிய எயிற்றள்
ஊர்முழுதும் நுவலும்நிற் காணிய சென்மே. 
 

என்பது  தோழி  தலைமகனை  வாயில்  மறுத்தது.-  மருதம்  பாடிய
இளங்கடுங்கோ.
 

 
'தொல்நலம் சிதையச் சாஅய், அல்கலும்,
இன்னும் வாரார்; இனிஎவன் செய்கு?' எனப்
பெரும்புலம் புறுதல் ஓம்புமதி-சிறுகண்
இரும்பிடித் தடக்கை மான, நெய்அருந்து
ஒருங்குபிணித்து இயன்ற நெறிகொள் ஐம்பால்
தேம் கமழ் வெறிமலர் பெய்ம்மார், காண்பின்
கழைஅமல் சிலம்பின் வழைதலை வாடக்
கதிர்கதம் கற்ற ஏகல் நெறியிடை,
பைங்கொடிப் பாகற் செங்கனி நசைஇ,
கான மஞ்ஞைக் கமஞ்சூல் மாப்பெடை
அயிர்யாற்று அடைகரை வயிரின் நரலும்
காடுஇறந்து அகன்றோர் நீடினர் ஆயினும்,
வல்லே வருவர்போலும்-வெண்வேல்
இலைநிறம் பெயர ஓச்சி, மாற்றோர்
மலைமருள் யானை மண்டுஅமர் ஒழித்த
கழற்கால் பண்ணன் காவிரி வடவயின்
நிழற்கயம் தழீஇய நெடுங்கால் மாவின்
தளிர்ஏர் ஆகம் தகை பெற முகைந்த
அணங்குடை வனமுலைத் தாஅய நின்
சுணங்கிடை வரித்தல் தொய்யிலை நினைந்தே. 
 

என்பது பிரிவிடை வேறுபட்ட தலைமகளைத் தோழி வற்புறுத்தியது. -
செயலூர் இளம்பொன் சாத்தன் கொற்றனார்.
 

 
வயிரத் தன்ன வைஏந்து மருப்பின்,
வெதிர்வேர் அன்ன பரூஉமயிர்ப் பன்றி
பறைக்கண் அன்ன நிறைச்சுனை பருகி,
நீலத்தன்ன அகல்இலைச் சேம்பின்
பிண்டம் அன்ன கொழுங்கிழங்கு மாந்தி,
பிடிமடிந் தன்ன கல்மிசை ஊழ்இழிபு,
யாறுசேர்ந் தன்ன ஊறுநீர்ப் படாஅர்ப்
பைம்புதல் நளிசினைக் குருகுஇருந் தன்ன,
வண்பிணி அவிழ்ந்த வெண்கூ தாளத்து
அலங்குகுலை அலரி தீண்டி, தாதுஉக,
பொன்உரை கட்டளை கடுப்பக் காண்வர,
கிளைஅமல் சிறுதினை விளைகுரல் மேய்ந்து,
கண்இனிது படுக்கும் நல்மலை நாடனொடு
உணர்ந்