அகநானூறு
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   394
Zoom In NormalZoom Out


 
தனை புணர்ந்த நீயும், நின்தோட்
பணைக்கவின் அழியாது துணைப்புணர்ந்து, என்றும்,
தவல்இல் உலகத்து உறைஇயரோ-தோழி-
'எல்லையும் இரவும் என்னாது, கல்லெனக்
கொண்டல் வான்மழை பொழிந்த வைகறைத்
தண்பனி அற்சிரம் தமியோர்க்கு அரிது' என,
கனவினும் பிரிவு அறியலனே; அதன்தலை
முன்தான் கண்ட ஞான்றினும்
பின்பெரிது அளிக்கும், தன் பண்பினானே. 
 

என்பது தோழி வரைவு மலிந்து சொல்லியது. - பரணர்.
 

 
விண்தோய் சிமைய விறல்வரைக் கவாஅன்,
வெண்தேர் ஓடும் கடம்காய் மருங்கில்,
துனைஎரி பரந்த துன்அரும் வியன்காட்டு,
சிறுகண் யானை நெடுங்கை நீட்டி
வான்வாய் திறந்தும் வண்புனல் பெறாஅது,
கான்புலந்து கழியும் கண்அகன் பரப்பின்
விடுவாய்ச் செங்கணைக் கொடுவில் ஆடவர்
நல்நிலை பொறித்த கல்நிலை அதர,
அரம்பு கொள்பூசல் களையுநர்க் காணாச்
சுரம்செல விரும்பினிர் ஆயின்-இன்நகை,
முருந்துஎனத் திரண்ட முள்எயிற்றுத் துவர்வாய்,
குவளை நாள்மலர் புரையும் உண்கண், இம்
மதிஏர் வாள்நுதல் புலம்ப,
பதிபெயர்ந்து உறைதல் ஒல்லுமோ, நுமக்கே? 
 

என்பது  பிரிவு  உணர்த்திய தலைமகற்குத்  தோழி செலவு அழுங்கச்
சொல்லியது. -கோடிமங்கலத்து வாதுளி நற்சேந்தனார்
 

 
நகைநனி உடைத்தால்-தோழி!- தகைமிக,
கோதை ஆயமொடு குவவுமணல் ஏறி,
வீததை கானல் வண்டல் அயர,
கதழ்பரித் திண்தேர் கடைஇ வந்து,
தண்கயத்து அமன்ற ஒண்பூங் குவளை
அரும்பு அலைத்து இயற்றிய சுரும்புஆர் கண்ணி
பின்னுப்புறம் தாழக் கொன்னே சூட்டி,
நல்வரல் இளமுலை நோக்கி, நெடிது நினைந்து,
நில்லாது பெயர்ந்தனன், ஒருவன்; அதற்கே
புலவுநாறு இருங்கழி துழைஇ, பல உடன்
புள் இறை கொண்ட முள்ளுடை நெடுந்தோட்டுத்
தாழை மணந்து ஞாழலொடு கெழீஇ,
படப்பை நின்ற முடத்தாட் புன்னைப்
பொன்நேர் நுண்தாது