அகநானூறு
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   396
Zoom In NormalZoom Out


 
வருதல் வேண்டும் தெய்ய-
அதிர்குரல் முதுகலை கறிமுறி முனைஇ,
உயர்சிமை நெடுங்கோட்டு உகள, உக்க
கமழ்இதழ் அலரி தாஅய் வேலன்
வெறிஅயர் வியன்களம் கடுக்கும்
பெருவரை நண்ணிய சாரலானே. 
 

என்பது தோழி இரா வருவானைப் 'பகல் வா' என்றது. - கபிலர்
 

 
'குவளை உண்கண் கலுழவும், திருந்திழைத்
திதலை அல்குல் அவ்வரி வாடவும்,
அத்தம் ஆர் அழுவம் நத்துறந்து அருளார்
சென்று சேண் இடையர் ஆயினும், நன்றும்
நீடலர்' என்றி-தோழி!-பாடு ஆன்று
பனித்துறைப் பெருங்கடல் இறந்து, நீர்பருகி,
குவவுத்திரை அருந்து கொள்ளைய குடக்குஏர்பு,
வயவுப்பிடி இனத்தின் வயின்வயின் தோன்றி,
இருங்கிளைக் கொண்மூ ஒருங்குடன் துவன்றி,
காலை வந்தன்றால் காரேமாலைக்
குளிர்கொள் பிடவின் கூர்முகை அலரி
வண்டுவாய் திறக்கும் தண்டா நாற்றம்
கூதிர்அற் சிரத்து ஊதை தூற்ற,
பனிஅலைக் கலங்கிய நெஞ்சமொடு
வருந்துவம் அல்லமோ, பிரிந்திசினோர் திறத்தே? 
 

இது தலைமகன்  குறித்த  பருவ வரவு கண்டு, தலைமகள் தோழிக்குச்
சொல்லியது. -கருவூர்க் கலிங்கத்தார்.
 

 
கடவுட் கற்பொடு குடிக்கு விளக்கு ஆகிய
புதல்வற் பயந்த புகழ்மிகு சிறப்பின்
நன்ன ராட்டிக்கு அன்றியும், எனக்கும்
இனிதுஆ கின்றால்; சிறக்க, நின்ஆயுள்!
அருந்தொழில் முடித்த செம்மல் உள்ளமொடு
சுரும்பு இமிர் மலர கானம் பிற்பட,
வெண்பிடவு அவிழ்ந்த வீகமழ் புறவில்
குண்டைக் கோட்ட குறுமுள் கள்ளிப்
புன்தலை புதைத்த கொழுங்கொடி முல்லை
ஆர்கழல் புதுப்பூ உயிர்ப்பின் நீக்கி,
தெள்அறல் பருகிய திரிமருப்பு எழிற்கலை
புள்ளிஅம் பிணையொடு வதியும் ஆங்கண்,
கோடுடைக் கையர், துளர் எறி வினைஞர்,
அரியல் ஆர்கையர், விளைமகிழ் தூங்க,
செல்கதிர் மழுகிய உருவ ஞாயிற்றுச்
செக்கர் வானம் சென்ற பொழுதில்,
கற்பால் அருவியின் ஒலிக்கும் நல்தேர்த்
தார்மணி பலஉடன் இயம்ப-
சீர்மிகு குருசில்-நீ வந்துநின் றதுவே. 
 

என்பது தலைமகன் வினைவயிற் பிரிந்து வந்து எய்திய இடத்து, தோழி
புல்லு மகிழ்வு உரைத்தது. - மதுரை மருதன் இளநாகனார்
 

 
எவ்வளை ஞெகிழச் சாஅய், ஆயிழை