அகநானூறு
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   397
Zoom In NormalZoom Out


 
நல்எழிற் பணைத்தோள் இருங்கவின் அழிய,
பெருங்கை யற்ற நெஞ்சமொடு நத்துறந்து,
இரும்பின் இன்உயிர் உடையோர் போல,
வலித்து வல்லினர், காதலர், வாடல்
ஒலிகழை நிவந்த நெல்லுடை நெடுவெதிர்
கலிகொள் மள்ளர் வில்விசையின் உடைய,
பைதுஅற வெம்பிய கல்பொரு பரப்பின்
வேனில் அத்தத்து ஆங்கண், வான் உலந்து
அருவி ஆன்ற உயர்சிமை மருங்கில்,
பெருவிழா விளக்கம் போல, பலஉடன்
இலைஇல மலர்ந்த இலவமொடு
நிலைஉயர் பிறங்கல் மலைஇறந் தோரே. 
 

என்பது  பிரிவிடை வேறுபட்ட தலைமகள் தோழிக்குச் சொல்லியது. -
பாலை பாடிய பெருங்கடுங்கோ
 

 
வானம் வேண்டா வறன்இல் வாழ்க்கை
நோன்ஞாண் வினைஞர் கோள்அறிந்து ஈர்க்கும்
மீன்முதிர் இலஞ்சிக் கலித்த தாமரை
நீர்மிசை நிவந்த நெடுந்தாள் அகல்இலை
இருங்கயம் துளங்க, கால்உறு தொறும்
பெருங்களிற்றுச் செவியின் அலைக்கும் ஊரனொடு
எழுந்த கௌவையோ பெரிதே; நட்பே,
கொழுங்கோல் வேழத்துப் புணைதுணை யாகப்
புனல் ஆடு கேண்மை அனைத்தே; அவனே,
ஒண்தொடி மகளிர் பண்டையாழ் பாட,
ஈர்ந்தண் முழவின் எறிகுணில் விதிர்ப்ப,
தண்நறுஞ் சாந்தம், கமழும்தோள் மணந்து,
இன்னும் பிறள்வயி னானே; மனையோள்
எம்மொடு புலக்கும் என்ப; வென்வேல்,
மாரி அம்பின், மழைத்தோற் பழையன்
காவிரி வைப்பின் போஒர் அன்ன, என்
செறிவளை உடைத்தலோ இலனே; உரிதினின்
யாம்தன் பகையேம் அல்லேம், சேர்ந்தோர்
திருநுதல் பசப்ப நீங்கும்
கொழுநனும் சாலும், தன் உடன்உறை பகையே. 
 

என்பது  தலைமகட்குப்  பாங்காயினார்  கேட்ப  இல்லிடைப் பரத்தை
சொல்லி நெருங்கியது. -பரணர்.
 

 
தோள்புலம்பு அகலத் துஞ்சி, நம்மொடு
நாள்பல நீடிய கரந்து உறை புணர்ச்சி
நாண் உடைமையின் நீங்கி, சேய் நாட்டு
அரும்பொருள் வலித்த நெஞ்சமொடு ஏகி,
நம்உயர்வு உள்ளினர் காதலர்-கறுத்தோர்
தெம்முனை சிதைத்த, கடும்பரிப் புரவி,
வார்கழற் பொலிந்த வன்கண் மழவர்
பூந்தொடை விழவின் தலைநாள் அன்ன,
தருமணல் ஞெமிரிய திருநகர் முற்றம்
புலம்புறும் கொல்லோ-தோழி!-சேண்ஓங்கு
அலந்தலை