|
ஞெமையத்து ஆள்இல் ஆங்கண், கல்சேர்பு இருந்த சில்குடிப் பாக்கத்து, எல்விருந்து அயர, ஏமத்து அல்கி, மனைஉறை கோழி அணல்தாழ்பு அன்ன கவைஒண் தளிர கருங்கால் யாஅத்து வேனில் வெற்பின் கானம் காய, முனைஎழுந்து ஓடிய கெடுநாட்டு ஆர்இடை, பனைவெளிறு அருந்து பைங்கண் யானை ஒண்சுடர் முதிரா இளங்கதிர் அமையத்து, கண்படு பாயல் கைஒடுங்கு அசைநிலை வாள்வாய்ச் சுறவின் பனித்துறை நீந்தி, நாள்வேட்டு எழுந்த நயன்இல் பரதவர் வைகுகடல் அம்பியின் தோன்றும் மைபடு மாமலை விலங்கிய
சுரனே?
என்பது பிரிவு
உணர்த்திய தோழிக்குத் தலைமகள் சொல்லியது;
தலைமகன் பிரிவின்கண் தலைமகட்குத் தோழி சொல்லியதூஉம் ஆம்.
- மாமூலனார்.
பெருங்கடல் முகந்த இருங்கிளைக் கொண்மூ! இருண்டுஉயர் விசும்பின் வலன்ஏர்பு வளைஇ, போர்ப்புஉறு முரசின் இரங்கி, முறைபுரிந்து அறன்நெறி பிழையாத் திறன்அறி மன்னர் அருஞ்சமத்து எதிர்ந்த பெருஞ்செய் ஆடவர் கழித்துஎறி வாளின், நளிப்பன விளங்கும் மின்னுடைக் கருவியை ஆகி, நாளும் கொன்னே செய்தியோ, அரவம்? பொன்என மலர்ந்த வேங்கை மலிதொடர் அடைச்சி, பொலிந்த ஆயமொடு காண்தக இயலி, தழலை வாங்கியும், தட்டை ஓப்பியும், அழல்ஏர் செயலை அம்தழை அசைஇயும், குறமகள் காக்கும் ஏனல் புறமும் தருதியோ? வாழிய,
மழையே!
என்பது இரவில் சிறைப்புறமாகத் தோழி சொல்லியது. - வீரைவெளியன்
தித்தனார்
பசும்பழப் பலவின் கானம் வெம்பி விசும்புகண் அழிய, வேனில் நீடி, கயம்கண் அற்ற கல் ஓங்கு வைப்பின் நாறு உயிர் மடப்பிடி தழீஇ, வேறுநாட்டு விழவுப்படர் மள்ளரின் முழவு எடுத்து உயரி, களிறுஅதர்ப் படுத்த கல்உயர் ‘கவாஅன் வெவ்வரை அத்தம் சுட்டி, பையென, வயலைஅம் பிணையல் வார்ந்த கவர்வுற, திதலை அல்குல் குறுமகள் அவனொடு சென்று பிறள்ஆகிய அளவை, என்றும் படர்மலி எவ்வமொடு மாதிரம் துழைஇ, மனைமருண்டு இருந்த என்னினும், நனைமகிழ் நன்னராளர் கூடுகொள் இன்இயம் தேர்ஊர் தெருவில் ததும்பும் ஊர்இழந் தன்று, தன் வீழ்வுஉறு
பொருளே.
என்பது மகட் போக்கிய செவிலி சொல்லியது. - கயமனார்
திரைஉழந்து அசைஇய நிரைவளை ஆயமொடு உப்பின் குப்பை ஏறி, எல்பட, வருதிமில் எண்ணும் துறைவனொடு, ஊரே ஒருதன் கொடுமையின் அலர்
|