|
உரவுப்பெயல்
உரும்இறை கொண்ட உயர்சிமைப்
பெருமலை நாட!-நின்மலர்ந்த மார்பே.
என்பது தோழி தலைமகனைச் செறிப்பு அறிவுறீஇ இரவுக்குறி மறுத்தது.
-பொதும்பில்கிழான் வெண்கண்ணனார்.
கான்உயர் மருங்கில் கவலை அல்லது,
வானம் வேண்டா வில்ஏர் உழவர்
பெருநாள் வேட்டம், கிளைஎழ வாய்த்த,
பொருகளத்து ஒழிந்த குருதிச் செவ்வாய்,
பொறித்த போலும் வால்நிற எருத்தின்,
அணிந்த போலும் செஞ்செவி, எருவை;
குறும்பொறை எழுந்த நெடுந்தாள் யாஅத்து
அருங்கவட்டு உயர்சினைப் பிள்ளை ஊட்ட,
விரைந்துவாய் வழுக்கிய கொழுங்கண் ஊன்தடி
கொல்பசி முதுநரி வல்சி ஆகும்
சுரன்நமக்கு எளிய மன்னே; நல்மனைப்
பல்மாண் தங்கிய சாயல், இன்மொழி,
முருந்துஏர் முறுவல், இளையோள்
பெருந்தோள் இன்துயில் கைவிடு கலனே.
என்பது பொருள்
வலித்த நெஞ்சிற்குச் சொல்லி, தலைமகன் செலவு
அழுங்கியது. - மதுரை மருதன் இளநாகனார்.
பேர்உறை தலைஇய பெரும்புலர் வைகறை,
ஏர்இடம் படுத்த இருமறுப் பூழிப்
புறம்மாறு பெற்ற பூவல் ஈரத்து,
ஊன்கிழித் தன்ன செஞ்சுவல் நெடுஞ்சால்,
வித்திய மருங்கின் விதைபல நாறி,
இரலைநல் மானினம் பரந்தவை போல்,
கோடுடைத் தலைக்குடை சூடிய வினைஞர்,
கறங்குபறைச் சீரின் இரங்க வாங்கி,
களைகால் கழீஇய பெரும்புன வரகின்
கவைக்கதிர் இரும்புறம் கதூஉ உண்ட,
குடுமி நெற்றி, நெடுமாத் தோகை
காமர் கலவம் பரப்பி, ஏமுறக்
கொல்லை உழவர் கூழ்நிழல் ஒழித்த
வல்இலைக் குருந்தின் வாங்குசினை இருந்து,
கிளிகடி மகளிரின் விளிபடப் பயிரும்
கார்மன் இதுவால்-தோழி!- 'போர்மிகக்
கொடுஞ்சி நெடுந்தேர் பூண்ட, கடும்பரி,
விரிஉளை நல்மான் கடைஇ
வருதும்' என்றுஅவர் தெளித்த போழ்தே.
என்பது பருவங் கண்டு ஆற்றாமை மீதூரத், தலைமகள் சொல்லியது.
-இடைக்காடனார்.
'அருஞ்சுரம் இறந்த என் பெருந்தோட் குறுமகள்
திருந்துவேல் விடலையொடு வரும்' என, தாயே,
புனைமாண் இஞ்சி பூவல் ஊட்டி,
மனைமணல் அடுத்து, மாலை நாற்றி,
உவந்து, இனிது அயரும் என்ப; யானும்,
மான்பிணை நோக்கின்
|