அகநானூறு
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   402
Zoom In NormalZoom Out


 

என்பது புணர்ந்து நீங்கிய தலைமகளது போக்கு நோக்கிய தலைமகன்
தன் நெஞ்சிற்குச் சொல்லியது. - பரணர்
 

 
கரைபாய் வெண்திரை கடுப்ப, பலஉடன்,
நிரைகால் ஒற்றலின், கல்சேர்பு உதிரும்
வரைசேர் மராஅத்து ஊழ்மலர் பெயல் செத்து,
உயங்கல் யானை நீர்நசைக்கு அலமர,
சிலம்பி வலந்த வறுஞ்சினை வற்றல்
அலங்கல் உலவை அரிநிழல் அசைஇ,
திரங்குமரல் கவ்விய கையறு தொகுநிலை,
அரம்தின் ஊசித் திரள்நுதி அன்ன,
திண்நிலை எயிற்ற செந்நாய் எடுத்தலின்,
வளிமுனைப் பூளையின் ஒய்யென்று அலறிய
கெடுமான் இனநிரை தழிஇய, கலையே
கதிர்மாய் மாலை ஆண்குரல் விளிக்கும்
கடல்போல் கானம் பிற்பட, 'பிறர்போல்
செல்வேம்ஆயின், எம்செலவு நன்று' என்னும்
ஆசை உள்ளம் அசைவின்று துரப்ப,
நீசெலற்கு உரியை-நெஞ்சே!-வேய்போல்
தடையின மன்னும், தண்ணிய, திரண்ட,
பெருந்தோள் அரிவை ஒழிய, குடாஅது
இரும்பொன் வாகைப் பெருந்துறைச் செருவில்,
பொலம்பூண் நன்னன் பொருதுகளத்து ஒழிய,
வலம்படு கொற்றம் தந்த வாய்வாள்,
களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரல்
இழந்த நாடு தந்தன்ன
வளம்பெரிது பெறினும், வாரலென் யானே. 
 

என்பது பொருள் கடைக்கூட்டிய நெஞ்சிற்குத் தலைமகன் சொல்லியது. -