|
கல்லாடனார்
|
| நிலாவின் இலங்கு மணல்மலி மறுகில், புலால்அம் சேரி புல்வேய் குரம்பை, ஊர்என உணராச் சிறுமையொடு, நீர்உடுத்து, இன்னா உறையுட்டு ஆயினும், இன்பம் ஒரு நாள் உறைந்திசி னோர்க்கும், வழிநாள், தம்பதி மறக்கும் பண்பின் எம்பதி வந்தனை சென்மோவளை மேய் பரப்ப!- பொம்மற் படுதிரை கம்மென உடைதரும் மரன்ஓங்கு ஒருசிறை பலபா ராட்டி, எல்லை எம்மொடு கழிப்பி, எல்உற, நல்தேர் பூட்டலும் உரியீர்; அற்றன்று, சேந்தனிர் செல்குவிர் ஆயின், யாமும் எம்வரை அளவையின் பெட்குவம்; நும்ஒப் பதுவோ? உரைத்திசின் எமக்கே. |
|
என்பது தலைமகள் குறிப்பு அறிந்த தோழி தலைமகற்குக் குறை நயப்பக்
கூறியது. -உலோச்சனார்
|
| அம்ம, வாழி-தோழி!-'பொன்னின் அவிர்எழில் நுடங்கும் அணிகிளர் ஓடை வினைநவில் யானை விறற்போர்ப் பாண்டியன் புகழ்மலி சிறப்பின் கொற்கை முன்துறை, அவிர்கதிர் முத்தமொடு வலம்புரி சொரிந்து, தழைஅணிப் பொலிந்த கோடுஏந்து அல்குல் பழையர் மகளிர் பனித்துறைப் பரவ, பகலோன் மறைந்த அந்தி ஆர்இடை, உருகெழு பெருங்கடல் உவவுக் கிளர்ந்தாங்கு, அலரும் மன்று பட்டன்றே; அன்னையும் பொருந்தாக் கண்ணள், வெய்ய உயிர்க்கும்' என்று எவன்கை யற்றனை, இகுளை? சோழர் வெண்ணெல் வைப்பின் நல்நாடு பெறினும், ஆண்டுஅமைந்து உறைநர்அல்லர்-முனாஅது வான்புகு தலைய குன்றத்துக் கவாஅன், பெருங்கை எண்கின் பேழ்வாய் ஏற்றை இருள்துணிந் தன்ன குவவுமயிர்க் குருளைத் தோல் முலைப் பிணவொடு திளைக்கும் வேனில் நீடிய சுரன்இறந் தோரே. |
|
என்பது பிரிவிடை
வேறுபட்ட தலைமகட்குத் தோழி சொல்லியது. -
மாமூலனார்
|
| வயங்குவெள் அருவிய குன்றத்துக் கவாஅன், கயந்தலை மடப்பிடி இனன் ஏமார்ப்ப, புலிப்பகை வென்ற புண்கூர் யானை கல்லகச் சிலம்பில் கைஎடுத்து உயிர்ப்பின், நல்இணர் வேங்கை நறுவீ கொல்லன் குருகுஊது மிதிஉலைப் பிதிர்வின் பொங்கி, சிறுபல் மின்மினி போல, பலஉடன் மணிநிற இரும்புதல் தாவும் நாட! யாமே அன்றியும் உளர்கொல்-பானாள், உத்தி அரவின் |
|  |