அகநானூறு
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   404
Zoom In NormalZoom Out


 

பைத்தலை துமிய,
உரஉரும் உரறும் உட்குவரு நனந்தலை,
தவிர்வுஇல் உள்ளமொடு எஃகு துணையாக,
கனைஇருள் பரந்த கல்அதர்ச் சிறுநெறி
தேராது வரூஉம் நின்வயின்
ஆர்அஞர் அரும்படர் நீந்துவோரே? 

இரவுக் குறிக்கண் வந்து நீங்கும் தலைமகற்குத் தோழி சொல்லி வரைவு
கடாயது. - ஆவூர்கிழார் மகனார் கண்ணனார்.

'உவக்குநள் ஆயினும், உடலுநள் ஆயினும்,
யாய் அறிந்து உணர்க' என்னார், தீவாய்
அலர்வினை மேவல் அம்பற் பெண்டிர்,
'இன்னள் இனையள்நின் மகள்' என, பல் நாள்
எனக்குவந்து உரைப்பவும், தனக்கு உரைப்பு அறியேன்,
'நாணுவள் இவள்' என நனிகரந்து உறையும்
யான்இவ் வறுமனை ஒழிய, தானே,
'அன்னை அறியின், இவண் உறை வாழ்க்கை
எனக்குஎளிது ஆகல் இல்' என, கழற்கால்
மின்ஒளிர் நெடுவேல் இளையோன் முன்னுற,
பல்மலை அருஞ்சுரம் போகிய தனக்குயான்
அன்னேன் அன்மை நன்வா யாக,
மான்அதர் மயங்கிய மலைமுதல் சிறுநெறி
வெய்து இடையுறா அது எய்தி, முன்னர்ப்
புல்லென் மாமலைப் புலம்புகொள் சீறூர்,
செல்விருந்து ஆற்றி, துச்சில் இருத்த,
நுனை குழைத்து அலமரும் நொச்சி
மனைகெழு பெண்டுயான் ஆகுக மன்னே! 

மகட் போக்கிய தாய் சொல்லியது. - கபிலர்.

உலகுஉடன் நிழற்றிய தொலையா வெண்குடை,
கடல்போல் தானை, கலிமா, வழுதி
வென்றுஅமர் உழந்த வியன்பெரும் பாசறைச்
சென்றுவினை முடித்தனம் ஆயின், இன்றே
கார்ப்பெயற்கு எதிரிய காண்தகு புறவில்,
கணம்கொள் வண்டின் அம்சிறைத் தொழுதி
மணம் கமழ் முல்லை மாலை ஆர்ப்ப,
உதுக்காண் வந்தன்று பொழுதே வல்விரைந்து,
செல்க, பாக!நின் நல்வினை நெடுந்தேர்-
வெண்ணெல் அரிநர் மடிவாய்த் தண்ணுமை
பல்மலர்ப் பொய்கைப் படுபுள் ஓப்பும்
காய்நெல் படப்பை வாணன் சிறுகுடித்
தண்டலை கமழும் கூந்தல்,
ஒண்தொடி மடந்தை தோள்இணை பெறவே. 

வினை  முற்றிய  தலைமகன்  தேர்ப்பாகற்குச் சொல்லியது. - மதுரைக்
காமக்கணி நப்பாலத்தனார்.

'உயிர்கலந்து ஒன்றிய தொன்றுபடு நட்பின்
செயிர்தீர் நெஞ்சமொடு செறிந்தோர் போல,
தையல்! நின்வயின் பிரியலம் யாம்' எனப்
பொய்வல் உள்ளமொடு புரிவுஉணக் கூறி,
துணிவுஇல் கொள்கையர் ஆகி, இனியே
நோய்மலி வருத்தமொடு நுதல்பசப் பூர,
நாம்அழ, துறந்தனர் ஆயினும், தாமே
வாய்மொழி நிலைஇய சேண்விளங்கு நல்இசை
வளம்கெழு கோசர் விளங்குபடை நூறி,
நிலம் கொள வெஃகிய பொலம்பூண் கிள்ளி,
பூவிரி நெடுங்கழி நாப்பண், பெரும் பெயர்க்
காவிரிப் படப்பைப் பட்டினத் தன்ன
செழுநகர் நல்விருந்து அயர்மார், ஏமுற
விழுநிதி எளிதினின் எய்துக தில்ல-
மழைகால் அற்சிரத்து மாலிருள் நீங்கி,
நீடுஅமை நிவந்த நிழல்படு சிலம்பில்,
கடாஅ யானைக் கவுள்மருங்கு உறழ
ஆம்ஊர்பு இழிதரு காமர் சென்னி,
புலிஉரி வரி அதள் கடுப்ப, கலிசிறந்து,
நாட்பூ வேங்கை நறுமலர்