|
உதிர, மேக்குஎழு பெருஞ்சினை ஏறி, கணக்கலை கூப்பிடூஉ உகளும் குன்றகச் சிறுநெறிக் கல்பிறங்கு ஆர்இடை விலங்கிய சொல்பெயர் தேஎத்த சுரன் இறந்தோரே.
தலைமகன் பிரிவின்கண் வேறுபட்ட தலைவி வற்புறுத்தும் தோழிக்குச்
சொல்லியது.- நக்கீரர்.
என்எனப் படும்கொல்-தோழி!-நல்மகிழ்ப் பேடிப் பெண்கொண்டு ஆடுகை கடுப்ப, நகுவரப் பணைத்த திரிமருப்பு எருமை மயிர்க்கவின் கொண்ட மாத்தோல் இரும்புறம், சிறுதொழில் மகாஅர் ஏறி, சேணோர்க்குத் துறுகல் மந்தியின் தோன்றும் ஊரன், மாரி ஈங்கை மாத்தளிர் அன்ன அம்மா மேனி, ஆய்இழை, மகளிர் ஆரம் தாங்கிய அலர்முலை ஆகத்து ஆராக் காதலொடு தார்இடை குழைய, முழவுமுகம் புலரா விழவுடை வியல்நகர், வதுவை மேவலன் ஆகலின், அதுபுலந்து, அடுபோர் வேளிர் வீரை முன்துறை, நெடுவெள் உப்பின் நிரம்பாக் குப்பை, பெரும் பெயற்கு உருகி யாஅங்கு, திருந்துஇழை நெகிழ்ந்தன, தடமென்
தோளே?
என்பது வாயில்
வேண்டிச் சென்ற விறலிக்குத் தலைமகள் வாயில்
மறுத்தது. - மதுரை மருதன் இளநாகனார்.
அணங்குடை முந்நீர் பரந்த செறுவின் உணங்குதிறம் பெயர்ந்த வெண்கல் அமிழ்தம் குடபுல மருங்கின் உய்ம்மார், புள்ஓர்த்துப் படை அமைத்து எழுந்த பெருஞ்செய் ஆடவர் நிரைப்பரப் பொறைய நரைப்புறக் கழுதைக் குறைக்குளம்பு உதைத்த கல்பிறழ் இயவின், வெஞ்சுரம் போழ்ந்த, அஞ்சுவரு கவலை, மிஞிறுஆர் கடாஅம் கரந்துவிடு கவுள, வெயில்தின வருந்திய, நீடுமருப்பு ஒருத்தல் பிணர்அழி பெருங்கை புரண்ட கூவல் தெண்கண் உவரிக் குறைக்குட முகவை, அறனிலாளன் தோண்ட, வெய்து உயிர்த்து, பிறைநுதல் வியர்ப்ப, உண்டனள் கொல்லோ- தேம்கலந்து அளைஇய தீம்பால் ஏந்திக் கூழை உளர்ந்து மோழைமை கூறவும், மறுத்த சொல்லள் ஆகி, வெறுத்த உள்ளமொடு உண்ணா
தோளே?
என்பது மகட்
போக்கிய தாய் சொல்லியது. - மதுரை எழுத்தாளன்
சேந்தம்பூதனார்
யாம இரவின் நெடுங்கடை நின்று, தேம்முதிர் சிமையக் குன்றம் பாடும் நுண்கோல் அகவுநர் வேண்டின், வெண்கோட்டு அண்ணல் யானை ஈயும் வண்மகிழ் வெளியன் வேண்மான் ஆஅய்
|