அகநானூறு
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   406
Zoom In NormalZoom Out


 
எயினன்,
அளிஇயல் வாழ்க்கைப் பாழிப் பறந்தலை,
இழைஅணி யானை இயல்தேர் மிஞிலியொடு
நண்பகல் உற்ற செருவில் புண்கூர்ந்து,
ஒள்வாள் மயங்குஅமர் வீழ்ந்தென, 'புள் ஒருங்கு
அம்கண் விசும்பின் விளங்கு ஞாயிற்று
ஒண்கதிர் தெறாமை, சிறகரின் கோலி,
நிழல்செய்து உழறல் காணேன், யான்' எனப்
படுகளம் காண்டல் செல்லான், சினம் சிறந்து,
உருவினை நன்னன், அருளான், கரப்ப,
பெருவிதுப் புற்ற பல்வேள் மகளிர்
குரூஉப்பூம் பைந்தார் அருக்கிய பூசல்,
வசைவிடக் கடக்கும் வயங்குபெருந் தானை
அகுதை கிளைதந் தாங்கு, மிகுபெயல்
உப்புச்சிறை நில்லா வெள்ளம் போல,
நாணுவரை நில்லா காமம் நண்ணி,
நல்கினள், வாழியர், வந்தே-ஓரி
பல்பழப் பலவின் பயம்கெழு கொல்லிக்
கார்மலர் கடுப்ப நாறும்,
ஏர்நுண், ஓதி மாஅ யோளே! 
 

என்பது புணர்ந்து நீங்கும் தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. -
பரணர்
 

 
'தோளும் தொல்கவின் தொலைந்தன நாளும்
அன்னையும் அருந்துயர் உற்றனள்; அலரே,
பொன்அணி நெடுந்தேர்த் தென்னர் கோமான்,
எழுஉறழ் திணிதோள் இயல்தேர்ச் செழியன்,
நேரா எழுவர் அடிப்படக் கடந்த
ஆலங் கானத்து ஆர்ப்பினும் பெரிது'என,
ஆழல்-வாழி, தோழி!-அவரே,
மாஅல் யானை மறப்போர்ப் புல்லி
காம்புடை நெடுவரை வேங்கடத்து உம்பர்
அறைஇறந்து அகன்றனர் ஆயினும்; நிறைஇறந்து
உள்ளார் ஆதலோ அரிதே-செவ்வேல்
முள்ளூர் மன்னன் கழல் தொடிக் காரி
செல்லா நல்இசை நிறுத்த வல்வில்
ஓரிக் கொன்று சேரலர்க்கு ஈத்த
செவ்வேர்ப் பலவின் பயன்கெழு கொல்லி,
நிலைபெறு கடவுள் ஆக்கிய,
பலர்புகழ் பாவை அன்னநின் நலனே. 
 

என்பது பிரிவிடை வேறுபட்ட தலைமகளைத் தோழி வற்புறுத்தியது. -
கல்லாடனார்.
 

 
குறியிறைக் குரம்பைக் கொலைவெம் பரதவர்
எறிஉளி பொருத ஏமுறு பெருமீன்
புண்உமிழ் குருதி புலவுக்கடல் மறுப்பட,
விசும்புஅணி வில்லின் போகி, பசும்பிசிர்த்
திரைபயில் அழுவம் உழக்கி, உரன்அழிந்து,
நிரைதிமில் மருங்கில் படர்தரும் துறைவன்,
பானாள் இரவில்நம், பணைத்தோள் உள்ளி,