யின்றி மீளா, பரிசிலரது சுற்றம்-எ - று. புரவியையுடைய விறற்சினந் தணிந்த உறுவரென இயையும். செல்சார்வாகித் தாளுளந்தபுத்த பொருநவென இயையும். புழைகெட விலங்கிய நாயென இயையும். வெள்வீயென்றது அதனையுடைய முல்லையை. மூவராயினுமென்ற உம்மை சிறப்பும்மை. கோடைப்பொருந! வேட்டுவ! பெட்பின்றீதல் யாம் வேண்டலம்; பரிசிலர் கடும்பு களிறின்று பெயரல; நீ நோயிலையாகுகவெனக் கூட்டுக. யான் களிறின்றிப் பெயராநின்றேனென்பது கருத்தாகலின், நோயிலையாகுகவென்பது இகழ்ச்சிக்குறிப்பு. ‘புழைகெட விலங்கி’ என்பதூஉம் பாடம்.
(206)
வாயி லோயே வாயி லோயே
வள்ளியோர் செவிமுதல் வயங்குமொழி வித்தித்தாம்
உள்ளியது முடிக்கு முரனுடை யுள்ளத்து
வரிசைக்கு வருந்துமிப் பரிசில் வாழ்க்கைப்
பரிசிலர்க் கடையா வாயி லோயே
கடுமான் றோன்ற னெடுமா னஞ்சி
தன்னறி யலன்கொ லென்னறி யலன்கொல்
அறிவும் புகழு முடையோர் மாய்ந்தென
வறுந்தலை யுலகமு மன்றே யதனாற்
காவினெங் கலனே சுருக்கினெங் கலப்பை
மரங்கொஃறச்சன் கைவல் சிறாஅர்
மழுவுடைக் காட்டகத்தற்றே
எத்திசைச் செலினு மத்திசைச் சோறே.
திணையும் துறையும் அவை. (பாடாண்டிணை, பரிசிற்றுறை) அதியமான் நெடுமானஞ்சி பரிசில் நீட்டித்தானை ஒளவையார் பாடியது. (இ-ள்.) வாயில்காப்போய்! வாயில்காப்போய்! வண்மையுடையோரது செவியிடத்தே விளங்கிய சொற்களை விதைத்துத் தாம் நினைந்த பரிசிலை
விளைக்கும் வலியையுடைத்தாகிய நெஞ்சினையுடைய, மேம்பாட்டிற்கு வருந்தும் இப்பரிசிலான் வாழும் இல்வாழ்க்கையையுடைய பரிசிலர்க்கு அடையாத வாயில்காப்போய்! விரைந்த குதிரையையுடைய குருசிலாகிய நெடுமானஞ்சி தான் தன் தரமறியான்கொல்லோ? அதுகிடக்க, என்தரம் அறியான்கொல்லோ? அறிவும் புகழுமுடையோர் இறந்தாராக வறிய இடத்தையுடைய உலகமுமன்றே; ஆகலாற் காவினேம் கலங்களை; கட்டினேம் முட்டுக்களை; மரத்தைத் துணிக்குந் தச்சன் பயந்த மழுவையுடைய கைத்தொழில் வல்லமகார் காட்டிடத்துச் சென்றால் அக்காட்டகம் பயன்படுமாறு அவர்க்கு எத்தன்மைத்து? எமக்கும் யாதொரு திசைக்கட் போகினும் அத்திசைக்கட் சோறு அத்தன்மைத்து-எ - று. கலம் - யாழுமாம். உள்ளத்தையுடைய பரிசிலரெனினும் அமையும். மழுவென்றது வாய்ச்சியை; தறிகையுமாம். காட்டகமென்றாரேனும் கருதியது அதன்கண் மரமாகக் கொள்க. பரிசிலர்க்குச் சிறாரும், கல்விக்கு மழுவும், செல்லுந்திசைக்குக் காடும், சோற்றிற்குக் காட்டுள் மரமும் உவமையாகக் கொள்க.
(207)
எழுவினி நெஞ்சஞ் செல்கம் யாரோ
பருகு வன்ன வேட்கை யில்வழி
அருகிற் கண்டு மறியார் போல
அகனக வாரா முகனழி பரிசில்
தாளி லாளர் வேளா ரல்லர்
வருகென வேண்டும் வரிசை யோர்க்கே
பெரிதே யுலகம் பேணுநர் பலரே
மீளி முன்பி னாளி போல
உள்ள முள்ளவிந் தடங்காது வெள்ளென
நோவா தோன்வயிற் றிரங்கி
வாயா வன்
|