புறநானூறு
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   484
Zoom In NormalZoom Out

கனிக் குலமரு வோரே. 

திணையும் துறையும் அவை. (பாடாண்டிணை, பரிசிற்றுறை) 

வெளிமான்   துஞ்சியபின்    அவன் தம்பி இளவெளிமானைப் பரிசில்
கொடுவென  அவன்  சிறிது கொடுப்பக் கொள்ளாது பெருஞ்சித்திரனார்
பாடியது.
 

(இ-ள்.) எழுந்திருப்பாயாக,   இனி    எம்முடைய    நெஞ்சமே! யாம்
போவேமாக;  யார்தாம்,  கண்ணாற் பருகுவது போலும் விருப்பமில்லாத
விடத்துத் தம்மருகே கண்டுவைத்தும் கண்டறியாதார்போல உள்ள மகிழ
வாராத தம்முகம் மாறித்  தரப்பட்ட பரிசிலைப் பிறிதோரிடத்துச் செல்ல
முயலும்  முயற்சியில்லாதோர்  விரும்பாரல்லர்?  இங்ஙனம்  வருவீராக
வென்று  எதிர்கோடல்  வேண்டும்  தரமுடையோர்க்கு, பெரிது உலகம்;
விரும்புவோரும்  பலர்;   ஆதலால்,  மறம்பொருந்திய  வலியையுடைய
யாளியையொப்ப,  உள்ளம்   மேற்கோளின்றித்  தணியாது,  கண்டோர்
யாவர்க்கும்  தெரியத்  தம்மைக்  கண்டு இரங்காதவனிடத்தே   நின்று
திரங்கி உள்ளுறக் கனியாத வலிய பழத்தின் பொருட்டுச்    சுழல்வோர்
-எ- று.
 

வன்கனியென்றது, நெஞ்சுநெகிழ்ந்து கொடாத பரிசிலை. 

உலமரலும் அலமரல் போல்வதோர் உரிச்சொல். 

வாயா     வன்கனிக்கு    உலமருவோர் யாரோ? நெஞ்சமே? உள்ளம்
உள்ளவிந்தடங்காது  யாளிபோல இனி எழுவெனக் கூட்டி வினைமுடிவு
செய்க.
 

வரிசையோர்க்கு    யாளிபோல    உள்ளம்    உள்ளவிந்தடங்காதென
முற்றாக்கி உரைப்பாரும் உளர்.
 

(208) குன்று மலையும் பலபின் னொழிய
வந்தனென் பரிசில் கொண்டனென் செலற்கென
நின்ற வென்னயந் தருளி யீதுகொண்
டீங்கனஞ் செல்க தானென வென்னை
யாங்கறிந் தனனோ தாங்கருங் காவலன்
காணா தீத்த விப்பொருட் கியானோர்
வாணிகப் பரிசில னல்லேன் பேணித்
தினையனைத் தாயினு மினிதவர்

துணையள வறிந்து நல்கினர் விடினே.

திணையும் துறையும் அவை. (பாடாண்டிணை, பரிசிற்றுறை) 

அதியமான்     நெடுமானஞ்சியுழைச் சென்ற    பெருஞ்சித்திரனாரைக்
காணாது    இதுகொண்டுசெல்கென்று   அவன்   பரிசில்   கொடுப்பக்
கொள்ளாது அவர் சொல்லியது.
 

(இ-ள்.) குன்றுகளும்    மலைகளும் பல பின்கழிய    வந்தேன் யான்
பரிசில்கொண்டேனாய்ப்   போதற்கெனச்   சொல்லி   நின்றவென்னை
அன்புற்றருளி  இப்பொருளைக்  கொண்டு  இவ்வாறு போக, தானெனச்
சொல்ல, என்னை எப்பரிசறிந்தான் பகைவரால் தடுத்தற்கரிய வேந்தன்?
என்னை  யழைத்துக்காணாதேதந்த  இப்பொருட்கு யான் ஓர் ஊதியமே
கருதும் பரிசிலனல்லேன்; விரும்பித்  தினைத்துணையளவாயினும் நன்று,
அந்தப்  பரிசிலரது  கல்விமுதலாகிய   பொருந்திய  எல்லையையறிந்து
கொடுத்து விடின்-எ - று.
 

ஈங்கனஞ்    செல்கவென்றது,    காணாதே   அவன்   சொல்லிவிட்ட
வார்த்தையை.
 

அவர்துணையளவறிந்து  பேணி   நல்கினர் விடின், தினையளவாயினும்
இனிதெனக் கூட்டி வினைமுடிவு செய்க.
 

யான்  தரங்கெடப்  பொருள்  கொடுபோமவன் அல்லேன்; அவனாயின்
இதுவும் கொடுபோவன்; நீ எனக்கு தரமறிந்து தரவேண்டுமென்பதாம்.
 

‘அவர் துணையளவு’ எனத் தம்மை உலகின்மேலிட்டுக் கூறினார். 

(209) பொய்கை நாரை போர்விற் சேக்கும்
நெய்தலங் கழனி நெல்லரி தொழுவர்
கூம்புவிடு மென்பிணி யவிழ்ந்த வாம்பல்
அகலடை யரியன் மாந்தித் தெண்கடற்
படுதிரை யின்சீர்ப் பாணி தூங்கும்
மென்புல வைப்பி னன்னாட்டுப் பொருந
பல்கனி நசைஇ யல்குவி