ஐய மறாஅர் கசடீண்டு காட்சி
நீங்கா நெஞ்சத்துத் துணிவில் லோரே
யானை வேட்டுவன் யானையும் பெறுமே
குறும்பூழ் வேட்டுவன் வறுங்கையும் வருமே
அதனால், உயர்ந்த வேட்டத் துயர்ந்திசி னோர்க்குச்
செய்வினை மருங்கி னெய்த லுண்டெனிற்
றொய்யா வுலகத்து நுகர்ச்சியுங் கூடும்
தொய்யா வுலகத்துநுகர்ச்சி யில்லெனின்
மாறிப் பிறப்பி னின்மையுங் கூடும்
மாறிப் பிறவா ராயினு மிமயத்துக்
கோடுயர்ந் தன்ன தம்மிசை நட்டுத்
தீதில் யாக்கையொடு மாய்தறவத் தலையே. திணை - பொதுவியல்; துறை -பொருண்மொழிக்காஞ்சி. அவன் வடக்கிருந்தான் சொற்றது. (இ-ள்.) அறவினையைச்செய்வேமோ
அல்லேமோவென்று கருதி ஐயப்பாடு
நீங்கார்
அழுக்குச்செறிந்த
காட்சிநீங்காத
உள்ளத்தினையுடைய தெளிவில்லாதோர்;யானைவேட்டைக்குப்போவோன்
யானையையும் எளிதாகப்
பெறுவன்; குறும்பூழ் வேட்டைக்குப்
போவோன் அது பெறாதுவறிய கையினனாயும்
வருவன்; அதனால்
உயர்ந்த விருப்பத்தையுடைய
உயர்ந்தோர்க்குத் தாம் செய்யப்பட்ட
நல்வினைக்கூற்றிலே அதனை அனுபவித்தலுண்டாமாயின் அவர்க்கு இருவினையும் செய்யப்படாத உம்பருலகத்தின்கண் இன்பம் அனுபவித்தலுங் கூடும் (பி-ம்.கூட்டும்) ; அவ்வுலகத்தின்கண் நுகர்ச்சியில்லையாயின், மாறிப் பிறத்தலிலேகூடும் பிறப்பின்கண் இன்மை எய்தவுங்கூடும்; மாறிப்பிறவாரென்று சொல்லுவாருளராயின் இமயமலையின் சிகரம் ஓங்கினாற்போன்ற தமது புகழைநிலைபெறுத்தி வசையில்லாத உடம்பொடு கூடிநின்று இறத்தல் மிகத் தலையாயது; அதனால் எவ்வாற்றானும் நல்வினைசெய்தல் அழகிது-எ - று. உயர்ந்திசினோர்க்கென்னும் நான்காவதன்றியும் உயர்ந்திசினோர் செய்வினைமருங்கின் எய்தலுண்டெனின், இவர்க்கு நுகர்ச்சிங் கூடுமென்றுரைப்பினும் அமையும். ‘பிறவாராயினும்’ என்னும் உம்மை அசைநிலை; உம்மையின்றி ஓதுவாரும் உளர். ‘காட்சியொடு நீங்கா நெஞ்சத்து’ என்பதூஉம் பாடம்.
(215)
கவைக்கதிர் வரகி னவைப்புறு வாக்கல்
தாதெரு மறுகிற் போதொடு பொதுளிய
வேளை வெண்பூ வெண்டயிர்க் கொளீஇ
ஆய்மக ளட்ட வம்புளி மிதவை
அவரை கொய்யுந ரார மாந்தும்
தென்னம் பொருப்ப னன்னாட் டுள்ளும்
பிசிரோ னென்பவென் னுயிரோம் புநனே
செல்வக் காலை நிற்பினும்
அல்லற் காலை நில்லலன் மன்னே.
திணை - பாடாண்டிணை; துறை - இயன்மொழி. கோப்பெருஞ்சோழன், பிசிராந்தையார் வாராரென்ற சான்றோர்க்கு அவர் வருவாரென்று சொல்லியது, (இ-ள்.) கவர்த்த கதிரினையுடைய வரகினது குற்றுதலுற்ற வடிக்கப்பட்ட சோற்றையும் தாதாக
|