திணை -பொதுவியல்; துறை - கையறுநிலை. அவன் வடக்கிருந்தானுழைச் சென்ற பிசிராந்தையாரைக் கண்டு பொத்தியார் பாடியது, (இ-ள்.)
கருதுங்காலத்து வியக்குந்தன்மையையுடைத்து, எத்துணையும் பெரியதலைமையுடனே கூடியும்
இவ்விடத்தே இவன் சிறப்புக்களைக் கைவிட்டுவரத் துணிதல்; இவன்
இவ்வாறு துணிந்த அதனினும் வியக்குந் தன்மையையுடைத்து, வேற்று வேந்தனது நாட்டின்கண் விளக்கம் அமைந்த சான்றோன் பாதுகாத்துப் புகழ்மேம்பாடாக நட்பே பற்றுக்
கோடாக இத்தன்மைத்தாகிய ஓர் இன்னாக்காலத்து இவ்விடத்து வருதல்; இவ்வாறு வருவனென்று துணிந்துசொல்லிய வேந்தனது மிகுதியும் அவன் சொல்லிய சொற் பழுதின்றாக வந்தவனது அறிவும் வியக்குந்தோறும் வியக்குந்தோறும் வியப்புக் கைமிக்கது; ஆதலால், தன்செங்கோல் செல்லாத தேயத்துறையும் அமைந்தோனது நெஞ்சைத் தன்னிடத்தே உரித்தாகப்பெற்ற பழைய புகழையுடைய அப்பெற்றிப்பட்ட பெரியோனை இழந்த
இத்தேயம் இடும்பையுறுங்கொல்லோ? இதுதான் இரங்கத் தக்கது-எ - று. இதுவென்பது, அரசினைக் கைவிட்டு இறந்துபடத்துணிதலென்றுமாம்.
(218)
பொன்னுந் துகிரு முத்து மன்னிய
மாமலை பயந்த காமரு மணியும்
இடைபடச் சேய வாயினுந் தொடைபுணர்ந்
தருவிலை நன்கல மமைக்குங் காலை
ஒருவழித் தோன்றியாங் கென்றுஞ் சான்றோர்
சான்றோர் பால ராப
சாலார் சாலார் பாலரா குபவே.
திணையும் துறையும் அவை. (பொதுவியல், கையறுநிலை) பிசிராந்தையார் வடக்கிருந்தாரைக் கண்ட கண்ணகனார் பாடியது. (இ-ள்.) பொன்னும் பவளமும் முத்தும் நிலைபெற்ற பெரிய மலை தரப்பட்ட விரும்பத்தக்க மணியும் ஒன்றற்கொன்று இடைநிலம்படச் சேய் நிலத்தினவாயினும் கோவைபொருந்தி அரிய விலையினையுடைய நல்ல அணிகலங்களைச் செய்யுங்காலத்து ஓரிடத்துத் தோன்றினாற்போல எந்நாளும் அமைந்தோர் அமைந்தோர்பக்கத்தராவார்; அமைதியில்லார் அமைதியில்லார் பக்கத்தராவர்-எ - று. சான்றோர்குழுவினைப் புகழுங்கருத்தாகலின், அவர்க்கேற்ற உவமம் கூறினார்; சாலாதார்க்கும் ஏற்றவுவமம் வருவித்துக்கொள்க. தொடைபுணர்ந்து தோன்றியாங்கென இயையும்.
(219)
உள்ளாற்றுக் கவலைப் புள்ளி நீழல்
முழூ உவள்ளுர முணக்கு மள்ள
புலவுதி மாதோ நீயே
பலரா லத்தைநின் குறியிருந் தோரே.
திணையும் துறையும் அவை. (பொதுவியல், கையறுநிலை) அவன் வடக்கிருந்தானைக் கருவூர்ப் பெருஞ்சதுக்கத்துப்பூதநாதனார் பாடியது. (இ-ள்.) யாற்றிடைக் குறையுட் புள்ளிப்பட்ட மரநிழற்கண் இருந்து உடம்பாகிய முழுத்தசையை வாட்டும் வீர! நின் கருத்திற்கேற்ப நின்னோடு வடக்கிருந்தார் பலராதலான், யான் இதற்கு உதவாது பிற்பட வந்ததற்கு என்னை அவரோடு
|