சும் புகந்து
பெருமலை விடரகஞ் சிலம்ப முன்னிப்
பழனுடைப் பெருமரந் தீர்ந்தெனக் கையற்றுப்
பெறாது பெயரும் புள்ளினம் போலநின்
நசைதர வந்துநின் னிசைநுவல் பரிசிலேன்
வறுவியேன் பெயர்கோ வாண்மேம் படுந
ஈயா யாயினு மிரங்குவே னல்லேன்
நோயிலை யாகுமதி பெரும நம்முட்
குறுநணி காண்குவ தாக நாளும்
நறும்ப லொலிவருங் கதுப்பிற் றேமொழித்
தெரியிழை மகளிர் பாணி பார்க்கும்
பெருவரை யன்ன மார்பிற்
செருவெஞ் சேஎய்நின் மகிழிருக் கையே. திணை - அது; துறை - பரிசில்கடாநிலை. (பாடாண்டிணை) மூவன்பரிசில் நீட்டித்தானைப் பெருந்தலைச்சாத்தனார் பாடியது, (இ-ள்.) பொய்கைக்கண் மேய்ந்த நாரை போரின்கண்ணே உறங்கும் நெய்தலையுடைய அழகியவயற்கண் நெல்லையறுக்கும் உழவர் முகையவிழ் கின்ற மெல்லிய இதழ்கள் நெகிழ்ந்தஆம்பலினது அகன்ற இலையதனாலே மதுவையுண்டு தெளிந்த கடலினது ஒலிக்குந்திரையின் இனிய சீராகியதாளத்தேயாடும் மென்புலத்தூர்களையுடைய நல்ல நாட்டுக்கு வேந்தே! பல பழத்தையும் நச்சித் தாம் வாழ்தற்கிடமாகிய ஆகாயத்தின் கண்ணே உயரப்பறந்து பெரிய மலையின்முழை எதிரொலி முழங்கச் சென்று அவ்விடத்துப் பழமுடைய பெரியமரம் பழுத்துமாறிற்றாக வருந்திப் பழம் பெறாதேமீளும் புள்ளினத்தையொப்ப
நினது நச்சப்படுந்தன்மை கொடுவர வந்து நின்புகழைக் கூறும் பரிசிலேன் யான்வறியேனாய் மீளக்கடவேனோ? வாட்போரின்கண் மேம்படுவோய்? நீ ஒன்றை ஈத்திலையாயினும் யான் அதற்கு வருந்துவேனல்லேன்; அது நிற்க, நோயின்றியிருப்பாயாக; பெரும! நம்மிடத்து
உளதாகிய அணிய அணுமையைக் காண்பதாக, நாடோறும் நறிய பலவாகிய தழைத்த மயிரையும் தேன்போலுஞ் சொல்லையும் ஆராய்ந்த ஆபரணத்தினையும் உடைய மகளிர் ஒருவரினொருவர் புணர்தற்குக் காலம்பார்க்கும் பெரிய மலைபோலும் மார்பினையுடைய போரைவிரும்பும் சேயையொப்பாய்! நினது மகிழ்ச்சியையுடைய நாளோலக்கம்-எ - று. பாணிபார்க்கும் மார்பு - பாணி பார்த்தற்கு ஏதுவாகிய மார்பு. நம்முட் குறுநணி காண்குவதாகவென்றது, நீ என்மாட்டுச் செய்த அன்பின்மையை அவ்விருக்கையன்றிப் பிறரறியாதொழிவாராகவென்னும் நினைவிற்று. பொருந! வாண்மேம்படுந!சேஎய்! நின் இசைநுவல்பரிசிலேன் வறுவியேன் பெயர்கோ? நீ ஈயாயாயினும் இரங்குவேனல்லேன்; பெரும! நோயிலையாகுமதி; நம்முட் குறுநணியை நின் இருக்கை காண்குவதாக; பிறர் காணாதொழிகவெனக் கூட்டுக. நோயிலையாகென்பது, நீ செய்த
தீங்கால் நோயுறுவை, அஃதுறா தொழிக வென்பதாம்;
|