புறநானூறு
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   496
Zoom In NormalZoom Out


கலம்     வனையும்   வேட்கோவே!  இரங்கத்தகுவை;   நீ  என்ன
வருத்தமுறுவைதான்?   நிலவெல்லையின்கண்   பரப்பிய  மிக்கபெரிய
சேனையினையுடைய   அறிவுடையோர்   புகழ்ந்த  பொய்யாத  நல்ல
புகழினையும்  பரந்த  சுடரினையுமுடைய  ஆதித்தன் வானத்தின்கண்
பரந்தா  லொத்த  சேய்மைக்கண்ணே  விளங்கும் தலைமையையுடைய
செம்பியர்      மரபினுள்ளான்,     கொடிகள்      நுடங்காநின்ற
யானையினையுடைய   மிகப்பெரிய   வளவன்,  அவன்  தேவருடைய
விண்ணுலகத்தை    அடைந்தானாகலான்,   அப்பெற்றிப்பட்டோனைக்
கவிக்கும்  இடமகன்ற  தாழியை  வனைதலை  நீ  விரும்பினாயாயின்
எப்படியும்   பெரிய   நிலவட்டம்  உருளியாகப்  பெரிய  மேருமலை
மண்ணாக வனைய இயலுமோ? இயலாதன்றே நினக்கு-எ-று. 

அடுக்கு விரைவின்கண் வந்தது. 

கலஞ்செய்கோவே,  வளவன்தேவருலகமெய்தினனாதலால், அன்னோற்
கவிக்கும்   தாழி   வனைதல் வேட்டனையாயின் இருநிலம்திகிரியாக
மாமேரு     மண்ணாக    வனைதலொல்லுமோ?    ஒல்லாமையின்
யாங்காகுவை? நீ இரங்கத் தக்காயெனக் கூட்டி வினைமுடிவு செய்க.  

இதுசுற்றத்தார் இரங்கிக் கூறுதலின், ஆனந்தப்பையுளாயிற்று. 

(229) ஆடிய லழற்குட்டத்
தாரிரு ளரையிரவில்
முடப்பனையத்து வேர்முதலாக்
கடைக்குளத்துக் கயங்காயப்
பங்குனியுய ரழுவத்துத்
தலைநாண்மீ னிலைதிரிய
நிலைநாண்மீ னதனெதி ரேர்தரத்
தொன்னாண்மீன் றுறைபடியப்
பாசிச் செல்லா தூசி முன்னா
தளக்கர்த்திணை விளக்காகக்
கனையெரி பரப்பக் காலெதிர்பு பொங்கி
ஒருமீன் விழுந்தன்றால் விசும்பி னானே
அதுகண், டியாமும் பிறரும் பல்வே றிரவலர்
பறையிசை யருவி நன்னாட்டுப் பொருநன்
நோயில னாயி னன்றுமற் றில்லென
அழிந்த நெஞ்ச மடியுளம் பரப்ப
அஞ்சின மெழுநாள் வந்தன் றின்றே
மைந்துடை யானை கைவைத் துறங்கவும்
திண்பிணி முரசங் கண்கிழிந் துருளவும்
காவல் வெண்குடை கால்பரிந் துலறவும்
காலியற் கலிமாக் கதியின்றி வைகவும்
மேலோ ருலக மெய்தின னாகலின்
ஒண்டொடி மகளிர்க் குறுதுணை யாகித்
தன்றுணை யாய மறந்தனன் கொல்லோ
பகைவர்ப் பிணிக்கு மாற்ற னசைவர்க்
களந்துகொடை யறியா வீகை
மணிவரை யன்ன மாஅ யோனே.
 

திணையும் துறையும் அவை. (பொதுவியல், ஆனந்தப்பையுள்) 

கோச்சேரமான்   யானைக்கட்சேஎய்   மாந்தரஞ்சேரல் இரும்பொறை
இன்னநாளிற்றுஞ்சுமென   அஞ்சி,  அவன்  துஞ்சியவிடத்துக்கூடலூர்
கிழார் பாடியது. 

(இ - ள்.)மேடவிராசிபொருந்திய கார்த்திகைநாளின் முதற்காலின்கண்
நிறைந்த    இருளையுடைய    பாதியிரவின்கண்  முடப்பனைபோலும்
வடிவையுடைய அனுட நாளின் அடியின்வெள்ளி (முதல்  நட்சத்திரம்)
முதலாகக் கயமாகிய குளவடிவுபோலும் வடிவையுடைய   புனர்பூசத்துக்
கடையின்   வெள்ளி   எல்லையாக  விளங்கப்   பங்குனிமாதத்தினது
முதற்பதினைந்தின்கண் உச்சமாகிய உத்தரம்அவ்வுச்சியினின்றும் சாய
அதற்கு   எட்டாமீனாகியமூலம்   அதற்கெதிரே  எழாநிற்க   அந்த
உத்தரத்திற்கு  முன்செல்லப்பட்ட எட்டாம்மீனாகிய  மிருகசீரிடமாகிய
நக்கத்திரம் (நக்ஷத்திரம்) துறையிடத்தே தாழக்கீழ்த்திசையிற் போகாது
வடதிசையிற்   போகாது   கடலாற்  சூழப்பட்ட  பூமிக்கு  விளக்காக
முழங்காநின்ற   தீப்பரக்கக்  காற்றாற்  பிதிர்ந்து  கிளர்ந்து  ஒருமீன்
வீழ்ந்தது  வானத்தினின்றும்;  அதனைப் பார்த்து யாமும் பிறருமாகிய
பல்வேறு