புறநானூறு
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   498
Zoom In NormalZoom Out

ண்டலை   மரீஇயோன்   பிண்டம்  யாங்கு  உண்டனன்  கொலெனக்
கூட்டுக. 

(235) சிறியகட் பெறினே யெமக்கீயு மன்னே
பெரியகட் பெறினே
யாம்பாடத் தான்மகிழ்ந் துண்ணு மன்னே
சிறுசோற் றானு நனிபல கலத்தன்மன்னே
பெருஞ்சோற் றானு நனிபல கலத்தன்மன்னே
என்பொடு தடிபடு வழியெல்லா மெமக்கீயு மன்னே
அம்பொடு வேனுழை வழியெல்லாந் தானிற்கு மன்னே
நரந்த நாறுந் தன்கையாற்
புலவு நாறு மென்றலை தைவரு மன்னே
அருந்தலை யிரும்பாண ரகன்மண்டைத் துளையுரீஇ
இரப்போர் கையுளும் போகிப்
புரப்போர் புன்கண் பாவை சோர
அஞ்சொனுண் டேர்ச்சிப் புலவர் நாவிற்
சென்றுவீழ்ந் தன்றவன்
அருநிறத் தியங்கிய வேலே
ஆசா கெந்தை யாண்டுளன் கொல்லோ
இனிப் பாடுநருமில்லைப் பாடுநர்க்கொன் றீகுநருமில்லைப்
பனித்துறைப் பகன்றை நறைக்கொண் மாமலர்
சூடாது வைகியாங்குப் பிறர்க்கொன்
றீயாது வீயு முயிர்தவப் பலவே.

திணையும் துறையும் அவை. (பொதுவியல், கையறுநிலை) 

அதியமான் நெடுமானஞ்சியை ஒளவையார் பாடியது. 

(இ - ள்.)  சிறிய  அளவினையுடைய மதுவைப் பெறின் எங்களுக்குத்
தருவன்;   அது   கழிந்தது!   பெரிய  அளவினையுடைய  மதுவைப்
பெற்றானாயின்  அதனை  யாமுண்டு  பாட  எஞ்சிய  மதுவைத் தான்
விரும்பி    நுகர்வான்;    அது    கழிந்தது!   சோறு   எல்லார்க்கும்
பொதுவாதலாற்   சிற்றளவினையுடைய   சோற்றின்கண்ணும்  மிகப்பல
கலத்தோடுங்கூட  உண்பன்;  அது  கழிந்தது! மிக்க அளவினையுடைய
சோற்றின்கண்ணும் மிகப்பல கலத்தோடுங்கூட உண்பன்; அது கழிந்தது!
என்போடுகூடிய    ஊன்றடியுளதாகிய    இடமுழுதும்    எங்களுக்கு
அளிப்பன்; அது கழிந்தது! அம்போடு வேல்தைத்து உருவும் இடமாகிய
போர்க்களமுழுதும்   தான்   சென்றுநிற்பன்;   அதுகழிந்ததே!  தான்
காதலிப்பார்க்கு  மாலை  சூட்டுதலான்  நரந்தப்பூ  நாறும் தன்னுடைய
கையால் தான் அருளுடைமையிற் புலால்நாறும் எம்முடைய தலையைத்
தடவுவன்; அது கழிந்ததே! அரிய தலைமையையுடைய பெரிய பாணரது
அகலிய மண்டையின்கண் துளையையுருவி. 

இரப்பவர்     கையுளும்  தைத்துருவித்  தன்னாற்  புரக்கப்படும்
சுற்றத்தாரது  புல்லிய  கண்ணிற்பாவை ஒளிமழுங்க அழகிய சொல்லை
ஆராயும்   நுண்ணிய   ஆராய்ச்சியையுடைய  அறிவினையுடையோர்
நாவின்கண்ணே  போய்  வீழ்ந்தது,  அவனது  அரிய மார்பத்தின்கண்
தைத்த  வேல்;  எமக்குப்  பற்றாகிய எம்மிறைவன் எவ்விடத்துள்ளான்
கொல்லோ?  இனிப்  பாடுவாரும்  இல்லை;  பாடுவார்க்கு ஒன்றீவாரும்
இல்லை;     குளிர்ச்சியையுடைய     நீரையுடைய     துறையின்கட்
பகன்றையினது தேனைப் பொருந்திய பெரிய மலர் பிறராற் சூடப்படாது
கழிந்தாற்.