புறநானூறு
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   500
Zoom In NormalZoom Out


பொலந்தார் வளவனென இயையும். 

கூற்றம்   இரந்ததாகல்வேண்டும்;   இம்மூன்றினுள்   ஒன்றுசெய்யினும்
பிழைப்பின்றெனக் கூட்டுக. 

இஃது   அவனாண்மை  மிகுதியினையும்  வண்மையினையும்  வியந்து
இரங்கிக் கூறியவாறு. 

(227) நனிபே தையே நயனில் கூற்றம்
விரகின் மையின் வித்தட் டுண்டனை
இன்னுங் காண்குவை நன்வா யாகுதல்
ஒளிறுவாண் மறவருங் களிறு மாவும்
குருதியங் குரூஉப்புனற் பொருகளத் தொழிய
நாளு மானான் கடந்தட் டென்றுநின்
வாடுபசி யருத்திய பழிதீ ராற்றல்
நின்னோ ரன்ன பொன்னியற் பெரும்பூண்
வளவ னென்னும் வண்டுமூசு கண்ணி
இனையோற்கொண்டனை யாயின்
இனியார் மற்றுநின் பசிதீர்ப் போரே.
 

திணையும் துறையும் அவை. (பொதுவியல், கையறுநிலை) 

அவனை ஆடுதுறை மாசாத்தனார் பாடியது. 

(இ - ள்.)   மிகவும்  அறிவுடையையல்லை,   ஈரமில்லாத கூற்றமே!
நினக்குப்   போவதொரு  விரகில்லாமையினான்   மேல்   விளைந்து
பயன்படும்  விதையைக்  குற்றியுண்டாய்;  ஆயின்  நினக்கு இவ்வாறு
சொல்லிய  வார்த்தைநல்லமெய்யாதல்  இன்னமுங்  காண்பை;  ஒளி
விளங்கிய    வாட்போரைவல்ல   வீரரும்   யானையும்   குதிரையும்
உதிரமாகிய  நிறமுடையஅழகிய  நீர்மிக்க போர்க்களத்தின்கண் மாய
நாள்தோறும்   அமையானாய்  எதிர்நின்று   கொன்று  நாள்தோறும்
நினதுமெய்   வாடுதற்கேதுவாகிய பசிதீர்த்தற்கு  ஊட்டிய  வசையற்ற
வலியையுடைய       கொலைத்தொழிலுக்கு       நின்னையொத்த
பொன்னானியன்ற       பேரணிகலத்தையுடைய     வளவனென்று
சொல்லப்படும்    வண்டுகள்    மொய்க்கப்படும்  கண்ணியையுடைய
இத்தன்மையினையுடையோனை     நீ    கொண்டாயாயின்,    இனி
நின்பசியைக் கெடுப்போர் யார்; சொல்லுவாயாக-எ-று. 

கூற்றமே!   இத்தன்மையோனைக்  கொண்டாயாயின், நின்  பசியைத்
தீர்ப்போர்    இனி    யார்?    விரகின்மையின் வித்தட்டுண்டனை;
நன்வாயாகுதல்    இன்னுங்    காண்குவையெனக்  கூட்டி   வினை
முடிவுசெய்க. 

நயன் - நியாயமுமாம். 

(228) கலஞ்செய் கோவே கலஞ்செய் கோவே
இருடிணிந் தன்ன குரூஉத்திரட் பரூஉப்புகை
அகலிரு விசும்பி னூன்றுஞ் சூளை
நனந்தலை மூதூர்க் கலஞ்செய் கோவே
அளியை நீயே யாங்கா குவைகொல்
நிலவரை சூட்டிய நீணெடுந் தானைப்
புலவர் புகழ்ந்த பொய்யா நல்லிசை
விரிகதிர் ஞாயிறு விசும்பிவர்ந் தன்ன
சேண்விளங்கு சிறப்பிற் செம்பியர் மருகன்
கொடிநுடங்கு யானை நெடுமா வளவன்
தேவ ருலக மெய்தின னாதலின்
அன்னோற் கவிக்குங் கண்ணகன் றாழி
வனைதல் வேட்டனை யாயி னெனையதூஉம்
இருநிலந் திகிரியாப் பெருமலை
மண்ணா வனைத லொல்லுமோ நினக்கே.
 

திணை - அது; துறை -ஆனந்தப்பையுள். (பொதுவியல்) 

அவனை ஐயூர் முடவனார் பாடியது. 

ஆனந்தப்பையுளாவது:- 

“விழுமங் கூர வேய்த்தோ ளரிவை
கொழுநன் வீயக் குழைந்துயங் கின்று”

                                 (பு. வெ. 266) 

(இ - ள்.) அடுகலம்வனையும்  வேட்கோவே (வேட்கோ  - குயவன்)!
அடுகலம்வனையும்   வேட்கோவே!  இருள்நீங்கி  ஓரிடத்தே  செறிந்து
நின்றாற்போன்ற  நிறமுடைத்தாய்த் திரண்ட மிக்கபுகை அகலிய பெரிய
ஆகாயத்தின்கட்    சென்று   தங்கும்   சூளையையுடைய   அகலிய
இடத்தினை யுடைய பழைய ஊரின்கட்