புறநானூறு
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   503
Zoom In NormalZoom Out

்போலப்  பிறர்க்கு  ஒருபொருளைக்  கொடுக்காது மாய்ந்துபோம் உயிர்
மிகப்பல-எ - று.

அவன்நிறத்து     உருவிய  வேல் அவனுக்கு இறந்துபாட்டைச் செய்த
லோடே  பாணர்  முதலாயினார்க்கும்  இறந்துபாட்டினைச் செய்தலான்
ஒருகாலத்தே யாவரிடத்தும் தைத்ததென்றாராகக் கொள்க.

மன் கழிவின்கண் வந்தது.

(236)கலையுணக் கிழிந்த முழவுமருள் பெரும்பழம்
சிலைகெழு குறவர்க் கல்குமிசை வாகும்
மலைகெழு நாட மாவண் பாரி
கலந்த கேண்மைக் கொவ்வாய் நீயெற்
புலந்தனை யாகுவை புரந்த யாண்டே
பெருந்தகு சிறப்பி னட்பிற் கொல்லா
தொருங்குவரல் விடாஅ தொழிகெனக்
கூறி இனையை யாதலி னினக்கு மற்றியான்
மேயினே னன்மை யானே யாயினும்
இம்மை போலக் காட்டி யும்மை
இடையில் காட்சி நின்னோ
டுடனுறை வாக்குக வுயர்ந்த பாலே.

திணை - அது; துறை - கையறுநிலை. (பொதுவியல்)

வேள்பாரி துஞ்சியவழி   அவன்   மகளிரைப்  பார்ப்பார்ப்படுத்து
வடக்கிருந்த கபிலர் பாடியது.

(இ - ள்.) முசுக்கலை கிழித்துண்டலாற் பீறிய முழவுபோலும் பெரிய
பலாப்பழம்   வில்லையுடைய   குறவர்க்கு  அதன்பெருமையாற்  சில
நாளைக்கு  இட்டுவைத்துண்ணும்  உணவாகும்  மலையுடைய  நாட்டை
யுடையோய்!  பெரிய  வண்மையையுடைய  பாரி!  நீயும் யானுங்கலந்த
நட்பிற்குப்  பொருந்த ஒழுகாயாய் நீ என்னை வெறுத்தாயாகக் கடவை,
நீ     எனக்கு     உதவிசெய்த     யாண்டுகளும்,     பெருமைதக்க
தலைமையினையுடைய  நட்பிற்குப்  பொருந்தாமல் யானும் நின்னோடு
கூடப்  போதுதற்கு  இயையாது  நீ  ஈண்டுத்  தவிர்கவெனச்  சொல்லி
இப்படி  வேறுபட்ட  தன்மையை  யுடையையாதலின்,  நினக்கு  யான்
பொருந்தி  னேனல்லாமையான்;  இங்ஙனம் பொருந்திற்றிலே னாயினும்
இப்பிறப்பின்கண்  நீயும்யானுங்கூடி இன்புற்றிருந்தவாறு போலக் காட்டி
மறுபிறப்பினும்    இடைவிடாத    காட்சியினையுடைய    நின்னோடு
கூடிவாழ்தலை உயர்ந்த விதி கூட்டுவதாக...எ - று.

உலந்த யாண்டு’ என்று பாடமாயின், கழிந்த யாண்டென்க.

மற்று: அசைநிலை.

(237)நீடுவாழ் கென்றியா னெடுங்கடை குறுகிப்
பாடி நின்ற பசிநாட் கண்ணே
கோடைக் காலத்துக் கொழுநிழ லாகிப்
பொய்த்த லறியா வுரவோன் செவிமுதல்
வித்திய பனுவல் விளைந்தன்று நன்றென
நச்சி யிருந்த நசைபழு தாக
அட்ட குழிசி யழற்பயந் தாஅங்
களியர் தாமே யார்க வென்னா
அறனில் கூற்றந் திறனின்று துணிய
ஊழி னுருப்ப வெருக்கிய மகளிர்
வாழைப் பூவின் வளைமுறி சிதற
முதுவா யொக்கற் பரிசில ரிரங்கக்
கள்ளி போகிய களரியம் பறந்தலை
வெள்வேல் விடலை சென்றுமாய்ந் தனனே
ஆங்கது நோயின் றாக வோங்குவரைப்
புலிபார்த் தொற்றிய களிற்றிரை பிழைப்பின்
எலிபார்த்