புறநானூறு
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   505
Zoom In NormalZoom Out

செய்தன னாகலின்
இடுக வொன்றோ சுடுக வொன்றோ
படுவழிப் படுகவிப் புகழ்வெய்யோன் றலையே.

திணையும் துறையும் அவை. (பொதுவியல், கையறுநிலை)

நம்பிநெடுஞ்செழியனைப் பேரெயின்முறுவலார் பாடியது.

(பி-ம்.)   இளைய  மகளிரது வளையணிந்த  தோளை முயங்கினான்;
காவலையுடைய    இளமரக்காக்களிற்    பூவைச்சூடினான்;   குளிர்ந்த
மணநாறும்சாந்தைப்    பூசினான்;    பகைத்தோரைக்   கிளையொடுங்
கெடுத்தான்;   நட்டோரை   மிகுத்துக்   கூறினான்;   இவர் நம்மில்
வலியரென்று   கருதி   அவர்க்கு   வழிபாடு   கூறியறியான்; இவர்
நம்மில்எளியரென்று   கருதி   அவரின்  மிகுத்துச்  சொல்லியறியான்;
பிறரைத்  தான்  ஒன்றீயெனச்  சொல்லி  இரந்தறியான்; சூழ்ந்துநின்று
இரந்தோருக்கு    யாதும்   இல்லையென்று   மறுத்தலை   அறியான்;
அரசருடைய    அவைக்களத்தின்கண்    தனது   உயர்ந்த   புகழை
வெளிப்படுத்தினன்;   தன்மேல்   வரும்படையைத்  தன்  எல்லையுட்
புகுதாமல்   எதிர்நின்று   தடுத்தான்;  புறக்கொடுத்துப்  பெயரப்பட்ட
படையினது   புறக்கொடைகண்டு   அதன்பின்  செல்லாது  நின்றான்;
விரைந்த  செலவையுடைய  குதிரையைத்  தன்  மனத்தினும் விரையச்
செலுத்தினான்;   நெடிய   வீதியின்கண்   தேரைச்சூழ  இயக்கினான்:
உயர்ந்த  இயல்பையுடையவாகிய  களிற்றைச்  செலுத்தினான்;  இனிய
செறிவையுடைத்தாகிய    மதுவையுடைய    குடங்களைப் பலர்க்கும்
வழங்கித் தொலைவித்தான்; பாணர் உவப்ப அவர் பசியை மாற்றினான்;
நடுவுநிலைமையின்        மயக்குதலையுடைய        சொற்களை
அந்நடுவுநிலைமையிற் பிழையாதபடி மயக்கந்தீரக் கூறினான்; அப்படிச்
செய்யத்தகுவனவெல்லாம்      செய்தானாதலான்,      இப்புகழை
விரும்புவோனது  தலையை வாளான் அறுத்துப் போகடினும் போகடுக;
அன்றிச்சுடினும் சுடுக; பட்டபடி படுக-எ - று.

‘நட்டோரை    யுயர்புகூறினன்'   என்றது,   தான் உயர்த்துக்கூறவே
யாவரும் உயர்த்துக்கூறுவரென்பதாம்.

‘மயக்குடைய     மொழிவிடுத்தனன்' என்பதற்கு உலகவொழுக்கத்தில்
மயக்கமுடைய  சொற்கள்  தன்னிடைப்  புகுதாமல் விடுத்தானென்றும்,
பொருண்மயங்கிய     சொற்களைத்     தன்னிடத்துப்     புகுதாமல்
விடுத்தானென்றும் உரைப்பினும்அமையும்.

ஒன்றோவென்பது எண்ணிடைச்சொல்.

(240)ஆடுநடைப் புரவியங் களிறுந் தேரும்c
வாடா யாணர் நாடு மூரும்
பாடுநர்க் கருகா வாஅ யண்டிரன்
கோடேந் தல்குற் குறுந்தொடி மகளிரொடு
கால னென்னுங் கண்ணிலி யுய்ப்ப
மேலோ ருலக மெய்தின னெனாஅப்
பொத்த வறையுட் போழ்வாய்க் கூகை
சுட்டுக் குவியெனச் செத்தோர்ப் பயிரும்
கள்ளியம் பறந்தலை யொருசிறை யல்கி
ஒள்ளெரி நைப்ப வுடம்பு மாய்ந்தது
புல்லென் கண்ணர் புரவலர்க் காணாது
கல்லென் சுற்றமொடு கையழிந்து புலவர்
வாடிய பசிய ராகிப்பிறர்
நாடுபடு செலவின ராயின ரினியே.

திணையும் துறையும் அவை. (பொதுவியல், கையறுநிலை)  

ஆயைக் குட்டுவன்கீரனார் பாடியது.  

(இ - ள்.)  தாளத்திற்கேற்ப  நடக்கும்   அசைந்த  நடையையுடைய
குதிரைக