புறநானூறு
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   506
Zoom In NormalZoom Out


என்றது, பூச்சூடி நுகர்வாரின்மையிற் பயனில்லையென்றதாம். 

(243) இனிநினைந் திரக்க மாகின்றுதிணிமணற
செய்வுறு பாவைக்குக் கொய்பூத் தைஇத்
தண்கய மாடு மகளிரொடு கைபிணைந்து
தழுவுவழித் தழீஇத் தூங்குவழித் தூங்கி
மறையென லறியா மாயமி லாயமொ
டுயர்சினை மருதத் துறையுறத் தாழ்ந்து
நீர்நணிப் படிகோ டேறிச் சீர்மிகக்
கரையவர் மருளத் திரையகம் பிதிர
நெடுநீர்க் குட்டத்துத் துடுமெனப் பாய்ந்து
குளித்துமணற் கொண்ட கல்லா விளமை
அளிதோ தானே யாண்டுண்டு கொல்லோ
தொடித்தலை விழுத்தண் டூன்றி நடுக்குற்
றிருமிடை மிடைந்த சிலசொற்
பெருமூ தாளரே மாகிய வெமக்கே.
 

திணையும் துறையும் அவை. (பொதுவியல், கையறுநிலை) 

தொடித்தலை விழுத்தண்டினார் பாடியது. 

(இ - ள்.)   இப்பொழுது  நினைந்து   இரக்கமாகாநின்றது:  செறிந்த
மணலிடத்துச் செய்யப்பட்ட வண்டற்பாவைக்குப் பறிக்கப்பட்ட பூவைப்
பறித்துச்  சூடிக் குளிர்ந்த பொய்கையின்கண் விளையாடும் மகளிரோடு
கைகோத்து  அவர்  தழுவின  இடத்தே  தழுவி  அசைந்த  விடத்தே
யசைந்து     ஒளித்துச்   செய்யுமஃதறியாத      வஞ்சனையில்லாத
இளமைந்தருடனேகூட     உயர்ந்தகோடுகளையுடைய     மருதினது
துறையிலே    வந்து   உறத்தாழ்ந்து   நீர்க்கு   அண்ணிதாகப்படிந்த
கொம்பிலே   ஏறி   அழகுமிகக்   கரையிடத்து   நிற்போர்  வியப்பத்
திரையிடத்துத்     திவலையெழ    ஆழத்தால்நெடிய    நீரையுடைய
மடுவின்கண்  துடுமென்று  ஒலிப்பக்  குதித்து மூழ்கி மணலை முகந்து
காட்டிய   கல்வியில்லாத   இளமை   இரங்கத்தக்கது;   அவ்விளமை
எவ்விடத்துண்டு   கொல்லோ   பூண்செறிந்த  தலையையுடைய  பரிய
தண்டுக்கோலையூன்றித்தளர்ந்து  இருமல்  இடையே  நெருங்கின  சில
வார்த்தையுடைய பெரிய முதுமையையுடையேமாகிய எங்களுக்கு?-எ-று. 

எமக்கு       இளமை      யாண்டுண்டுகொல்லோ?     அதுதான்
இரங்கத்தக்கதெனக் கூட்டுக.  

இளமைகழிந்து இரங்கிக்கூறுதலான் இதுவும் கையறுநிலையாயிற்று. 

‘மறையென வறியார்’ என்று பாடமோதுவாரும் உளர். 

(244) பாணர் சென்னியும் வண்டுசென் றூதா
விறலியர் முன்கையுந் தொடியிற் பொலியா
இரவன் மாக்களு.........
 

(இ - ள்.)     ........முசுக்கலையின்     நீக்குதற்கு     இரலையென
விசேடித்தனர்..... 

...சாதலென்பது இன்னாதாதலிற் பெரும்பிறிதாயின்றோவென்றான். 

தானுறுகின்ற துன்பத்தைக் கலைமேல் வைத்துக் கூறியவாறு, 

(245) யாங்குப்பெரி தாயினு நோயள வெனைத்தே
உயிர்செகுக் கல்லா மதுகைத் தன்மையிற்
கள்ளி போகிய களரியம் பறந்தலை
வெள்ளிடைப் பொத்திய விளைவிற கீமத்
தொள்ளழற் பள்ளிப் பாயல் சேர்த்தி
ஞாங்கர் மாய்ந்தனண் மடந்தை
இன்னும் வாழ்வ லென்னிதன் பண்பே.
 

திணையும் துறையும் அவை. (பொதுவியல், கையறுநிலை) 

சேரமான் கோட்டம்பலத்துத் துஞ்சிய மாக்கோதை தன்பெருங்கோப்