வான்சோற்றைக் கொண்டு இனிய பாலை வேண்டும் வெறுப்பைத் தம்மிடத்தேயுடைய புதல்வர்தந்தை தனியிடத்தையுடைய புறங்காட்டை அடைந்தபின்- எ - று. கொய்து நீக்கியென்னும் வினையெச்சங்களை உணவினையுடைய வென்னுங் குறிப்புவினையோடு முடிக்க. நகரே! நீ புதல்வர் தந்தை காடு முன்னியபின் புல்லென்றனையெனக் கூட்டுக. முனித்தலை -குடுமித்தலையெனினும் அமையும். (251)
ஓவத் தன்ன விடனுடை வரைப்பிற்
பாவை யன்ன குறுந்தொடி மகளிர்
இழைநிலை நெகிழ்த்த மள்ளற் கண்டிகும்
கழைக்க ணெடுவரை யருவி யாடிக்
கான யானை தந்த விறகிற்
கடுந்தெறற் செந்தீ வேட்டுப்
புறந்தாழ் புரிசடை புலர்த்து வோனே. திணை - வாகை; துறை - தாபதவாகை. ...............மாற்பித்தியார் பாடியது. (இ - ள்.) ஓவியம்போலும் அழகினையுடைத்தாகிய இடமுடைய இல்லின்கண் கொல்லிப்பாவைபோன்றவடிவினையுடைய சிறிய வளை யணிந்த மகளிருடைய
அணிகலங்களை அவை நிற்கும் நிலையினின்றும் கழலும்வகை ஆதரஞ்செய்தவனைக்கண்டேம்; மூங்கிலிடத்தையுடைய நெடியமலையிடத்து அருவிநீரை யாடிக் காட்டியானை கொண்டுவரப்பட்ட விறகால் மிக்க வெம்மையையுடைய செந்தீயை வேட்டு முதுகின்கண்ணே தாழ்ந்த புரிந்த சடையைப் புலர்த்துவோன் -எ - று. ஆடி வேட்டுப் புலர்த்துவோனென இயையும். முன்பு இழைநெகிழ்த்த மள்ளற் கண்டேம், அவன் இப்பொழுது புறந்தாழ் புரிசடை புலர்த்தாநின்றோனென அவனைக் கண்டு வியந்து கூறியவாறு. பாவையென்றது, பிறிது எவ்வுணர்வுமின்றிக் காமவேட்கையாகிய ஒரு குறிப்பினை. கானயானை தந்த விறகென்றது, இவன் தவமிகுதியான் அதுவும் ஏவல் செய்தல். (252)
கறங்குவெள் ளருவி யேற்றலி னிறம்பெயர்ந்து
தில்லை யன்ன புல்லென் சடையோ
டள்ளிலைத் தாளி கொய்யு மோனே
இல்வழங்கு மடமயில் பிணிக்கும்
சொல்வலை வேட்டுவ னாயினன் முன்னே. திணையும் துறையும் அவை. (வாகை, தாபதவாகை) அவனை அவர் பாடியது. (...............மாற்பித்தியார் பாடியது.) (இ - ள்.) ஒலிக்கும் வெள்ளிய அருவிநீரை ஏற்றலாற் பழையநிறம் மாறித்
தில்லந்தளிர்போன்ற புற்கென்ற சடையோடு கூடிநின்று செறிந்த இலையையுடைய தாளியைப் பறிப்போன், மனையின்கண் இயங்கும்மடப் பத்தையுடைய மயிலை அகப்படுத்திக்கொள்ளும் சொல்லாகிய
வலையை யுடைய வேட்டைக்காரனாயினான் முன்பு -
எ-று. இதுவும் அவன் நிலைமையைக் கண்டு வியந்து கூறியது. (253)
என்றிறத் தவலங் கொள்ள லினியே
வவ்வார் கண்ணி யிளையர் திளைப்ப
நகாஅலென வந்த மாறே யெழாநெற்
பைங்கழை பொதிகளைந் தன்ன விளர்ப்பின்
வளையில் வறுங்கை யோச்சிக்
கிளையு ளொய்வலோ கூறுநின் னுரையே. திணை - பொதுவியல்; துறை -முதுபாலை. ............. குளம்பாதாயனார்
|