பெண்டு துஞ்சிய காலைச் சொல்லிய பாட்டு. (இ - ள்.) எப்படிப் பெரிதாயினும் யானுற்ற நோயினதுஎல்லை எவ்வளவாயிற்று, என்னுயிரைப் போக்கமாட்டாத வலியையுடைத்தல்லாமையால்? கள்ளி வளரப்பட்ட புறங்காட்டுள் வெள்ளிடையின் மூட்டிய தீயை விளைக்கும் சிறிய விறகையுடைய படுக்கையின்கண் ஒள்ளிய அழலாகிய பாயலின்கண்ணே பொருந்தப்பண்ணி மேலுலகத்தே போயினாள், மடவாள்; அவள் மாயவும் இன்னமும் உயிரிருந்து வாழ்வேன்; இவ்வுலகியற்கை இருந்தவாறு என்னோ! - எ - று. எனைத்தென்றது, உயிரைப் போக்கமாட்டாமையின் நோயை இகழ்ந்து கூறியவாறு. ‘பாவை சேர்த்தி’ என்றோதி அவளுடம்பை அழகுபடப் பள்ளியுட் கிடத்தியென்று உரைப்பாரும் உளர். உயிர் செகுக்கலாமைக்குக் காரணம் மதுகையுடைத்தல்லாமையென வுணர்க. பாயல்சேர்த்தி இன்னும்வாழ்வலென இயையும். சேர்த்தவெனத் திரிப்பினும்அமையும். ‘ஞாங்கர் மாய்ந்தனள்’ என்பதற்கு என்னை நீத்து முன்னே இறந்தாளென்றுமாம்.
(246) பல்சான் றீரே பல்சான் றீரே
செல்கெனச் சொல்லா தொழிகென விலக்கும்
பொல்லாச் சூழ்ச்சிப் பல்சான் றீரே
அணில்வரிக் கொடுங்காய் வாள்போழ்ந் திட்ட
காழ்போ னல்விளர் நறுநெய் தீண்டா
தடையிடைக் கிடந்த கைபிழி பிண்டம்
வெள்ளெட் சாந்தொடு புளிப்பெய் தட்ட
வேளை வெந்தை வல்சி யாகப்
பரற்பெய் பள்ளிப் பாயின்று வதியும்
உயவற் பெண்டிரே மல்லே மாதோ
பெருங்காட்டுப் பண்ணிய கருங்கோட் டீமம்
நுமக்கரி தாகுக தில்ல வெமக்கெம்
பெருந்தோட்கணவன் மாய்ந்தென வரும்பற
வள்ளித ழவிழ்ந்ததாமரை
நள்ளிரும் பொய்கையுந் தீயுமோ ரற்றே. திணை - அது; துறை -ஆனந்தப்பையுள். (பொதுவியல்) பூதபாண்டியன்றேவி பெருங்கோப்பெண்டு தீப்பாய்வாள் சொல்லியது. ஆனந்தப்பையுளாவது:- “விழுமங் கூர வேய்த்தோ ளரிவை கொழுநன் வீயக் குழைந்துயங் கின்று” (பு. வெ. 266) (இ - ள்.) பலசான்றவிரே! பலசான்றவிரே! நின் தலைவனோடு இறப்ப நீ போவென்று கூறாது அதனைத் தவிர்கவென்று சொல்லி விலக்கும் பொல்லாத விசாரத்தையுடைய பலசான்றவிரே! அணிலினது வரிபோலும் வரியையுடைய வளைந்த வெள்ளரிக்காயை அரிவாளால் அரிந்திடப்பட்ட விதைபோன்ற நல்ல வெள்ளிய நறிய நெய்தீண்டாமல் இலை இடையே பயின்ற கையாற் பிழிந்து கொள்ளப்பட்ட நீர்ச்சோற்றுத்திரளுடனே வெள்ளிய எள்ளரைத்த விழுதுடனே புளிகூட்டி அடப்பட்ட வேளையிலைவெந்த வேவையுமாகிய இவை உணவாகக் கொண்டு பருக்கைகளாற் படுக்கப்பட்ட படுக்கையின் கண் பாயும் இன்றிக் கிடக்கும் கைம்மைநோன்பால் வருந்தும் பெண்டிருள்ளேமல்லேம் யாம்; புறங்காட்டின்கண் உண்டாக்கப்பட்ட கரிய முருட்டால் அடுக்கப்பட்ட
|