புறநானூறு
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   519
Zoom In NormalZoom Out

நிரை  போகின்ற  இடத்தைப்  பார்த்துத் தன் கையாற் குறித்து மெல்ல
எண்ணிக்   கரந்தையார்  செய்யும்பூசலை  மாற்றி  வில்லாலே  கொடு
போந்தனன்;   அந்நிரைதாம்  மிகப்பலவேயாயினும்  என்னபயன்படும்
எத்தன்மைத்தும்,    பால்முதலியன    பெய்யப்படாமையிற்   சிறிதும்
வெள்ளிய  முகந்தோன்றாத  பானையைக் காண்டலுடனே, நாட்காலத்து
உறைதெறிப்பக்  கடையும்  மத்தின்  ஒலியைக்  கேளாதபடி  பிறருக்கு
நேராகக் கொடுத்தல் வல்லனாயினான், அவனுக்கு?-எ - று.

பகைவர்   மேல்   நடக்கவொட்டாது  எதிரில்  நின்று  விலக்குதலின்,
‘செருப்பிடைச் சிறுபர லன்னன்’ எனப்பட்டான்.

‘அன்ன’   என்று   பாடமோதி,   செருப்பிடைச்  சிறுபரலோசைபோல
நெடிய ஓசையையுடைய காலென்றுரைப்பாரும் உளர்.

யார்கொலென்றது அறியான்வினாதலன்றி வியப்பின்கண் வந்தது.

‘ஊர்பெரி திகந்தன்று மிலனே’என்பது நிரைகோட்கடுமை.

சிறுபரலன்னன்    கவுளனாகிய  அளியனானவன்றான் யார்கொல்லோ?
தேரின்  வில்லோடு  ஊர்பெரிது  இகந்தன்றும்  இலனாய்க் காடு கைக்
கொண்டதும் இலனாய்நோக்கி எண்ணி மாற்றினான்; மாற்றிக் குழிசி

காண்டலோடு     மத்தொலி     கேளாதோனாயினான்;    அவனுக்கு
அவைதாம் மிகப்பலவாயினும் என்னாம் எனக்கூட்டுக.

கேளாதோற்கென உருபுவிரித்து உரைப்பினும் அமையும்.

(258) முட்காற் காரை முதுபழ னேய்ப்பத்
தெறிப்ப விளைந்த தீங்கந் தாரம்
நிறுத்த வாயந் தலைச்சென் றுண்டு
பச்சூன் றின்று பைந்நிணம் பெருத்த
எச்சி லீர்ங்கை விற்புறந் திமிரிப்
புலம்புக் கனனே புல்லணற் காளை
ஒருமுறை யுண்ணா வளவைப் பெருநிரை
ஊர்ப்புற நிறையத் தருகுவன் யார்க்கும்
தொடுத லோம்புமதி முதுகட் சாடி
ஆதரக் கழுமிய துகளன்
காய்தலு முண்டக் கள்வெய் யோனே.

திணையும் துறையும் அவை. (வெட்சி, உண்டாட்டு)

.......................உலோச்சனார் பாடியது.

உண்டாட்டாவது:-

‘’தொட்டிமிழுங் கழன்மறவர்
மட்டுண்டு மகிழ்தூங்கின்று’’
                (பு. வெ. 15)

(இ - ள்.) முட்டாளையுடைய  காரையினது முதிர்ந்த பழத்தையொப்ப
முற்ற    விளைந்த    இனிய    கந்தாரமென்னும்    பெயரையுடைய
மதுவையுடைய    வேற்றுப்புலத்துத்   தான்கொண்டுவந்து   நிறுத்தின
நிரையைக்     கள்விலைக்கு     நேராகக்     கொடுத்து     உண்டு
செவ்வித்தசையைத்தின்று   செவ்விநிணமிக்க  எச்சிலாகிய  ஈரமுடைய
கையை  வில்லினது  புறத்தே திமிர்ந்து வேற்று நாட்டின்கட் புக்கானே,
புல்லிய   தாடியையுடைய   காளை;   இவ்விருந்த   மறவர்  ஒருகால்
உண்பதன்முன்னே    பெரிய   ஆனிரையை   இவ்வூர்ப்புறமெல்லாம்
நிற்பக்கொடுதருகுவன்;    யாவர்க்கும்    வாராது    அதற்பொருட்டுத்
தொடுதலைப் பாதுகாத்துவைப்பாயாக, முதிர்ந்த