பலவேற்படையுடனே தலைமை பொருந்திய யானையையுமுடைய வேந்தர்க்குக் கொடியோனாகிய இனியோன்மலை; அது கழிந்தது-எ - று. குன்று தேறல் கல்லலைத்தொழுகும்; இனி அது கழிந்ததென்று கூட்டுக. அருவியும் அவன் உளனாயின் உளதாவதென்பது கருத்து. மன் : கழிவின்கண் வந்தது. குன்று தேறல் கல்லலைத்தொழுகுமென இடத்துநிகழ்பொருளின் தொழில் இடத்துமேல் ஏறிநின்றது. (116)
தீநீர்ப் பெருங்குண்டு சுனைப்பூத்த குவளைக்
கூம்பவிழ் முழுநெறி புரள்வரு மல்குல்
ஏந்தெழின் மழைக்க ணின்னகை மகளிர்
புன்மூசு கவலைய முண்மிடை வேலிப்
பஞ்சி முன்றிற் சிற்றி லாங்கட்
பீரை நாறிய சுரையிவர் மருங்கின்
ஈத்திலைக் குப்பை யேறி யுமணர்
உப்பொ யொழுகை யெண்ணுப மாதோ
நோகோ யானே தேய்கமா காலை
பயில்பூஞ் சோலை மயிலெழுந் தாலவும்
பயிலிருஞ் சிலம்பிற் கலைபாய்ந் துகளவும்
கலையுங் கொள்ளா வாகப் பலவும்
கால மன்றியு மரம்பயம் பகரும்
யாண ரறாஅ வியன்மலை யற்றே
அண்ண னெடுவரை யேறித் தந்தை
பெரிய நறவிற் கூர்வேற் பாரிய
தருமை யறியார் போரெதிர்ந்து வந்த
வலம்படு தானை வேந்தர்
பொலம்படைக் கலிமா வெண்ணு வோரே. திணையும் துறையும் அவை. (பொதுவியல், கையறுநிலை) அவனை அவர் பாடியது. (இ - ள்.) இனிய நீரையுடைய பெரிய ஆழ்ந்த சுனைக்கட் பூத்த செங்கழுநீரினது முகையவிழ்ந்த புறவிதழ் ஒடித்த முழுப்பூவாற் செய்யப்பட்ட தழையசையும் அல்குலையும் மிக்க அழகையுடைய குளிர்ந்த கண்ணினையும் இனிய முறுவலையுமுடைய மகளிர் புல்மொய்த்த கவலையையுடையனவாகிய முள்ளால் நெருங்கிய வேலியையும் பஞ்சு பரந்த முற்றத்தையுமுடைய சிறியமனையிடத்தின்கட் பீர்க்கு முளைத்த சுரைபடர்ந்தவிடத்தில் ஈத்திலையையுடைய குப்பையின்கண் ஏறி உமணர் உப்புச் செலுத்தும் சகடத்தை எண்ணுவர்; நோவேன் யான்; எனது வாழ்நாள் கெடுவதாக; பயின்ற பூவையுடைய சோலைக்கண் மயிலெழுந்து ஆடவும் பயின்ற பெரிய மலையின்கண்ணேயேறி முசுக்கலை (ஒருவகைக் குரங்கின் ஆண்) தாவி உகளவும் அம்முசுக்கலையும் நுகர்ந்து வெறுத்தலாற் கொள்ளாவாம் பரிசு காலமன்றாகவும் மரங்கள் பலவும் காயும் பழமும் முதலாயினவற்றை விளைந்துகொடுக்கும் புது வருவாய் ஒழியாத அகன்ற மலையைப்போலும் பயனுடைத்தாகிய தலைமையையுடைய உயர்ந்த வரையின்கண்ணேயேறித் தம்முடைய தந்தையாகிய மிக்க மதுவினையும் கூ
|