புறநானூறு
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   535
Zoom In NormalZoom Out

 

மார்பிற் றாருங் கொன்றை

ஊர்தி வால்வெள் ளேறே சிறந்த

சீர்கெழு கொடியு மவ்வே றென்ப

கறைமிட றணியலு மணிந்தன் றக்கறை

மறைநவி லந்தணர் நுவலவும் படுமே

பெண்ணுரு வொருதிற னாகின் றவ்வுருத்

தன்னு ளடக்கிக் கரக்கினுங் கரக்கும

பிறைநுதல் வண்ண மாகின் றப்பிறை

பதினெண் கணனு மேத்தவும் படுமே

எல்லா வுயிர்க்கு மேம மாகிய

நீரற வறியாக் கரகத்துத்

தாழ்சடைப் பொலிந்த வருந்தவத் தோற்கே.
 

கடவுள் வாழ்த்து.

பாரதம்பாடிய பெருந்தேவனார் பாடியது.

இதன்  பொருள் - திருமுடிமேற் சூடப்படுங் கண்ணி கார்காலத்து
மலரும்  நறிய  கொன்றைப்பூ;  அழகிய நிறத்தையுடைய திருமார்பின்
மாலையும்  அக்  கொன்றைப்பூ;  ஏறப்படுவது தூய வெளிய ஆனேறு;
மிக்க  பெருமை பொருந்திய கொடியும் அவ்வானேறென்று சொல்லுவர்;
நஞ்சினது   கறுப்பு,   திருமிடற்றை   அழகு   செய்தலும்  செய்தது;
அக்கறுப்பு,   தான்  மறுவாயும்  வானோரை  உய்யக்கொண்டமையின்,
வேதத்தைப்   பயிலும்   அந்தணராற்  புகழவும்படும்;  பெண்  வடிவு
ஒருபக்கமாயிற்று;    ஆய   அவ்வடிவுதான்,   தன்னுள்ளே   ஒடுக்கி
மறைக்கினும்    மறைக்கப்படும்;    பிறை,   திருநுதற்கு   அழகாயது.
அப்பிறைதான்   பெரியோன்  சூடுதலால்,  பதினெண்  கணங்களாலும்
புகழவும்படும்;   எவ்வகைப்பட்ட   உயிர்களுக்கும்   காவலாகிய,  நீர்
தொலைவறியாக்  குண்டிகையானும்  தாழ்ந்த திருச்சடையானும் சிறந்த
செய்தற்கரிய தவத்தையுடையோனுக்கு - என்றவாறு.
 

தன்னுளடக்கிக்  கரக்கினும்  கரக்குமென்பதற்கு   அவ்வடிவுதான்
எல்லாப் பொருளையும் தன்னுள்ளேயடக்கி அவ்விறைவன்