புறநானூறு
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   538
Zoom In NormalZoom Out

 

யொழிந்து  புளிப்பினும் ஞாயிறு தன் விளக்கமொழிந்து இருளினும்,
நான்குவேதத்தினது    ஒழுக்கம்    வேறுபடினும்    வேறுபாடில்லாத
சூழ்ச்சியையுடைய   மந்திரச்   சுற்றத்தோடு   ஒழியாது  நெடுங்காலம்
விளங்கித்   துளக்கமின்றி   நிற்பாயாக;   அரைமலையின்கட்   சிறிய
தலையையுடைய   மறிகளையுடையவாகிய   பெரிய   கண்ணையுடைய
மான்பிணைகள்  அந்திக்காலத்தே  அந்தணர்  செய்தற்கரிய கடனாகிய
ஆவுதியைப்   பண்ணும்   முத்தீயாகிய  விளக்கின்கண்ணே  துயிலும்
பொற்சிகரங்களையுடைய     இமயமலையும்     பொதியின்மலையும்
போன்று-எ-று.
 

குளிக்குநாடென இயையும;் குளிக்குநாடென இடத்துநிகழ் பொருளின்
தொழில்  இடத்துமேல்  ஏறிநின்றது.  நீயோ; ஓ : அசைநிலை; அன்றி,
இதனை   வினாவாக்கி,   ஞாயிறு  குளிக்கு  மென்பதனை  முற்றாக்கி,
வானவரம்பனென்பதனை     அவ்வினாவிற்குப்     பொருளாக்கி
உரைப்பாருமுளர்.
 

முத்தீயாவன : ஆகவனீயம், காருகபத்தியம், தென்றிசையங்கி.
 

ஆங்கும்,  அத்தையும்  :  அசைநிலை.  வானவரம்பனை;  ஐகாரம்
முன்னிலையை விளக்கிநின்றது.
 

நிலந்தலைக்கொண்ட  (14)   என்பதற்கு  நிலங்கோடல்காரணமாகத் தலைக்கட்சூடியவெ