இருப்பினையும், கையாற்கவிக்கப்பட்ட கண்ணாற் குறித்துப் பார்க்கும் பார்வையையும், செவ்விய தொடை பிழையாத தறுகண்மையையுமுடைய மறவர்தாம் அம்பை விடுதலாற் பட்டோரது உடன்மூடிய புதியகற்குவையின்மேலே திருந்திய சிறகினையும் வளைந்த வாயினையுமுடைய பருந்திருந்து வருந்தும் உன்னமரத்தினையுடையவாகிய அணுகுதற்கரிய கவர்த்த வழியின்கண்ணே நின்பால் நச்சிய விருப்பத்தால் இரப்போர் வருகுவர்; அங்ஙனம் வருவது, அவர் மனக்குறிப்பை அவர் |
முகத்தானறிந்து அவருடைய வறுமையைத் தீர்த்தலை வல்ல தன்மையான் - எ - று. |
நுதலையும் திறலையும் கடாத்தையும் மருங்கையும் பெருங்கையையும் உடைய யானைப்பிடர்த்தலையிருந்து எயிறுபடையாக எயிற்கதவிடாக் கூற்றத்து அருந்தொழில் சாயாப்பெரும்பெயர்வழுதியென மாறிக் கூட்டுக: காலாலடுதல் கையாலூக்குதலன்றி எயிறு படையாக எயிற்கதவிடக்கை விடாத பெருங்கையானையென இயைத் துரைப்பினுமமையும்; எயிற்கதவிடாஅக் கயிறுபிணிக்கொண்டவென இயைத்துரைப்பாருமுளர். |
ஊரில்ல உயவரிய நீரில்ல நீளிடையவாகிய உன்னமரத்த கவலையெனவும், பருந்திருந்துயவும் துன்னருங்கவலையெனவும் இயையும். |
மருக, கணவ, வழுதி, மார்ப, இரவலர் வருவர்; அஃது அவர் இன்மை தீர்த்தல்வன்மையான்; அதனால், நின்சொற் பெயராதொழியல் வேண்டுமெனக் கூட்டி வினைமுடிவுசெய்க. |
வாழ்த்தியலாதல் விளங்க, வேண்டுமென ஒரு சொல் தந்துரைக்கப்பட்டது. |
(4) | வாள், வலந்தர மறுப்பட்டன |
| செவ்வானத்து வனப்புப்போன்றன |
| தாள், களங்கொளக் |
 |