புறநானூறு
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   542
Zoom In NormalZoom Out


கொல்ல் லேற்றின் மருப்புப்போன்றன
தோல், துவைத்தம்பிற் துளைதோன்றுவ
நிலைக்கொராஅ விலக்கம் போன்றன
மாவே, எறிபதத்தா னிடங்காட்டக்
கறுழ்பொருத செவ்வாயான்
எருத்துவவ்விய புலிபோன்றன
களிறு, கதவெறியாச் சிவந்துராஅய்
நுதிமழுங்கிய வெண்கோட்டான்
உயிருண்ணுங் கூற்றுப்போன்றன
நீயே, அலங்குளைப் பரீஇயிவுளிப்
பொலந்தேர்மிசைப் பொலிவுதோன்றி
மாக்கட னிவந்தெழுதரும்
செஞ்ஞாயிற்றுக் கவினைமாதோ
அனையை யாகன் மாறே
தாயி றூவாக் குழவி போல
ஓவாது கூஉநின் னுடற்றியோர் நாடே.

திணை - வஞ்சி; துறை - கொற்றவள்ளை.

சோழன் உருவப்பஃறேரிளஞ்சேட்சென்னியைப் பரணர் பாடியது.
 

(இ  - ள்.) வாள்  வெற்றியைத் தருதலாற் குருதிக்கறைபட்டன, செக்கர் வானத்தினது  அழகையொத்தன;  கால்புடை  பெயர்ந்துபோர்
செய்து     களத்தைத்     தமதாக்கிக்கொள்ளுதலால்    வீரக்கழல்
அருப்புத்தொழில்              பறைந்தவை,         கொல்லும்
ஆனேற்றினதுகோட்டையொத்தன;  பரிசைகள்   ஒலித்துத்   தைத்த
அம்புகளால்            துளைதோன்றுவன,      நிலையிற்றப்பாத
இலக்கத்தையொத்தன;  குதிரைகள்  எதிரியைஎறியும் காலமுடையான்
இடவாய்  வலவாயாகிய  இடத்தைக்  காட்ட  முகக்கருவி பொரப்பட்ட
செவ்வாயை  உடைமையான் மான்முதலாயினவற்றின் கழுத்தைக் கவ்வி
உதிரம்  உவற்றியுண்ட  புலியை யொத்தன; களிறுகள், கதவை முறித்து
வெகுண்டு உலாவி