புறநானூறு
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   543
Zoom In NormalZoom Out

ஓங்கியெழுகின்ற     செய்ய   ஞாயிற்றினது    ஒளியையுடையை;
அத்தன்மையையாதலால்,  தாயில்லாத உண்ணாக் குழவிபோல ஒழியாது
கூப்பிடும் நின்னைச் சினப்பித்தவருடைய நாடு - எ - று.

நாடென்றது (19)  நாட்டுள்  வாழ்வாரை.  மாறென்பது  (17)  ஏதுப்
பொருள்படுவதோர் இடைச்சொல்.

கழல்பரிந்தன  (3) வென்றோதி,   வீரக்கழல்   நீங்கியவையென்று
உரைப்பாருமுளர்.

வாளாகிய     மறுப்பட்டவை    (1)    யெனவும்,    கழலாகிய
பறைந்தவையெனவும்  (3)  தோலாகிய  துளைதோன்றுவ (5) வெனவும்
கொள்க.

துவைத்துத்   தோன்றுவவென   இயையும்.  எறிபதத்தா    (7) னென்பதற்கு ஒத்தும் காலையுடையானென்று உரைப்பாருமுளர்.

செஞ்ஞாயிற்றுக் கவினை (16) யென்றதுணையும்  மன்னவன் புகழும்,
ஓவாது  கூஉநின்  உடற்றியோர் நாடென (19) ஒன்னார் நாடழிபிரங்கலு
மோதலான், இது கொற்றவள்ளை (பு. வெ. 43) யாயிற்று.

(5) எருமை யன்ன கருங்கல் லிடைதோ
றானிற் பரக்கும் யானைய முன்பிற்
கானக நாடனை நீயோ பெரும
நீயோ ராகலி னின்னொன்று மொழிவல்
அருளு மன்பு நீக்கி நீங்கா
நிரயங் கொள்பவரொ டொன்றாது காவல்
குழவி கொள்பவரி னோம்புமதி
அளிதோ தானேயது பெறலருங் குரைத்தே. 

திணை   -   பாடாண்டிணை;  துறை -  செவியறிவுறூஉ; பொருண்மொழிக்காஞ்சியுமாம்.

சேரமான் கருவூ