புறநானூறு
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   544
Zoom In NormalZoom Out

கண்டஞான்று  நின்  உடம்பு  பெறுவாயாகென  அவனைச்
சென்று கண்டு  தம்முடம்பு  பெற்றுநின்ற நரிவெரூஉத்தலையார் பாடியது.
 

(இ   - ள்.) எருமைபோலும் வடிவையுடைய  கரிய கற்பொருந்திய
இடந்தோறும்    பெற்றம்போலப்   பரக்கும்   யானையையுடையவாய்
வலியையுடைய  காட்டிற்குள்ளாகிய  நாட்டினையுடையாய்!  பெரும! நீ
இங்ஙனம்     பகைவரான்      அணுகப்படாத       இயல்பாகிய
பெருஞ்செல்வத்தையுடையனாதலால்,     நினக்கு    ஒரு    காரியஞ்
சொல்வேன்;  அதனைக் கேட்பாயாக; அருளையும் அன்பையும் நீக்கிப்
பாவஞ்செய்தாரைநீங்காத  நரகத்தைத் தமக்கிடமாகக் கொள்பவரோடு
பொருந்தாது     நீ     காக்கப்படும்     தேயத்தைக்   குழவியை
வளர்ப்பாரைப்போலப்    பாதுகாப்பாயாக;   அளிக்கத்தக்க தொன்று
அக்காவல்; அது பெறுதற்கரிது, எ - று.
 

காவலென்றது  (7)  ஆகுபெயர்.    நாடனை   (3)   :   ஐகாரம்
முன்னிலைக்கண் வந்தது. ஓவும், ஓரும் : அசைநிலை.

அருளாவது:  -  ஒன்றின்  துயர்கண்டாற்  காரணமின்றித்
 தோன்றும் இரக்கம்(தொல். பொருள். 53, ந.)
 

அன்பாவது:   -   தன்னாற்   புரக்கப்படுவார்  மேலுளதாகிய  காதல்.(தொல். பொருள். 53, ந.)
  

இனி,  ஓகாரத்தைப் பிரித்து வினாவாக்கிக் கோப்பெருஞ்சேரலிரும்
பொறையைக்   கண்டஞான்று  நின்னுடம்புபெறுவாயெனத்  தம்முடம்பு
பெற்றமை தோன்ற, நீயோவென வினாவினாராக்கியுரைப்பாருமுளர்.
 

காவல்குழவிகொள்பவரினோம்பென்றமையாற்   செவியறிவுறூஉவும்,
அருளும்   அன்பும்   நீக்கி   நீங்கா   நிரயங்கொள்பவரொடொன்றா
தென்றமையாற் பொருண்மொழிக் காஞ்சியுமாயிற்று.
 

(6) 

வடாஅது பனிபடு நெடுவரை வடக்கும்

தெனாஅ துருகெழு குமரியின் றெற்கும்

குணாஅது கரைபொரு தொடுகடற் குணக்கும்

குடாஅது தொன்றுமுதிர்