நிலமும் ஆகாயமும் சுவர்க்கமுமென மூன்றுங்கூடிய புணர்ச்சியாக அடுக்கப்பட்ட அடைவின்கண் முதற்கட்டாகிய நீர்நிலைக்கண் ஓங்கிய நிலத்தின்கீழும், மேலதாகிய கோலோகத்தின்கண்ணும் அமையாது உட்கும் புகழுமாகப் பரந்த அளவையுடைய பொருள்களை ஆராயும் துலாக்கோலின்கட் சமன்வாய்போல ஒருபக்கம் கோடாதொழிக; நினது படை குடிமுதலாகிய கூறுபாடுகள் சிறக்க; போர் செய்தற்கு மாறுபட்ட பகைவர் தேயத்தின்கண்ணே நினது கடல்போலும் படை மேல்விழுந்து உள்புக மிக்குச் சென்று அடர்ந்த புகரினையுடைய சிறுகண்யானையைத் தடையின்றி நேரே ஏவிப் பசிய விளைநிலப் பக்கத்தையுடைய அரிய மதிலரண் பலவற்றையுங் கொண்டு அவ்வரணின்கட் கொள்ளப்பட்ட அழகுபடச் செய்த நல்ல அணிகலங்களைப் பரிசிலர்க்கு வரிசையின் வழங்கி நினது கொற்றக்குடை முனிவராற்பரவப்படும் மூன்று திருநயனத்தையுடைய செல்வரது கோயிலை வலம் வருவதற்குத் தாழ்க; பெரும! நினது முடி, மிக்க நான்கு வேதத்தினையுடைய அந்தணர் நின்னை நீடுவாழ்கவென்றெடுத்த கையின்முன்னே வணங்குக; இறைவ! நினது கண்ணி, நின்பகைவரது நாட்டைச் சுடும் பலமணம் நாறும் புகையுறைத்தலான் |