புறநானூறு
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   547
Zoom In NormalZoom Out

துனித்த     ஒளியையுடைய முகத்தின் முன்னர்த் தணிக; வென்று
வென்றிமுழுதையும்  வியவாது  நின்மனத்தே  உட்கொண்ட  தணியாத
வண்மையையுடைய     தகுதிமாட்சிமைப்பட்ட    குடுமி!    குளிர்ந்த
சுடரையுடைய திங்களையொப்பவும் சுடுகின்ற ஒளிபொருந்திய ஒள்ளிய
கதிரையுடைய     ஞாயிற்றையொப்பவும்     நிலைபெறுவாயாக,   நீ
உலகத்தின்மேல் - எ - று.
  

வடாது     (1) என்னும் முற்றுவினைக்குறிப்பைப்  பெயர்ப்படுத்தி,
பனிபடு   நெடுவரையொடு   பண்பொட்டாக்கி,   அதன்வடக்குமென்க;
ஒழிந்தனவுமன்ன.
  

மேலது     துறக்கத்தின்  மேலுமென்பார்,  அதற்கு  மேலதாகிய
ஆனிலையுலகத்தானும் (7) என்றார். உரு (8) என்பது, இவனாணையாற்
பிறரஞ்சும் உட்குடைமை.
  

அத்தை (23) யும், ஆங்க (25) வும் அசைநிலை.
 

குடுமி!     பெரும! உருவும் புகழும் ஆக; ஒருதிறம் பற்றாதொழிக;
நிற்றிறஞ்   சிறக்க;   பணிக;  இறைஞ்சுக;  வாடுக;  செல்லுக;  பரிசின்
மாக்கட்கு  நல்கி மதியம்போலவும், ஞாயிறுபோலவும் நீ நிலத்தின்மிசை
மன்னுக வெனக்கூட்டி வினைமுடிவு செய்க.
 

தேஎத்து  (11)  என்பதனுள்,  அத்தை  அசைநிலையாக்கி,  தேயம்
கடற்படைக்குள்ளே குளிப்பவென்றுரைப்பாருமுளர்.
  

ஞமன்     (9) - யமனெனினுமமையும். அடற்புகர்ச் சிறுகண் யானை
(12)    யென்று   பாடமோதி,   கொலையைச்செய்யும்   புகரையுடைய
யானையெனினும் அமையும்.
 

ஆகி     (8) , ஆகவெனத்   திரிந்துநின்றது; ஆகியென்பதனைத்
திரியாது,  நிற்றிறஞ்  சிறக்க  (10)  என்பதனோடு இயைத்துரைப்பாரும்
உளர். நின்றிறம், நிற்றிறமென வலிந்து நின்றது.
 

நகர்வலஞ்செயற்குப்     பணியியரென    வீடும்,  ஏந்துகையெதிர்
இறைஞ்சுகவென     அறமும்,    புகையெறித்தலான்    வாடுகவெனப்
பொருளும், முகத்தெதிர் தணிகவென இன்பமும் கூறியவாறாயிற்று.
 

இஃது, இவ்வாறு செய்கவென அரசியல்