கூறுபடுப்பை; திங்கள் மண்டிலத்திற்கு முதுகிட்டுப் போதி; தெற்கும் வடக்குமாகிய இடங்களில் மாறிமாறி வருவை; மலையின்கண்ணே வெளிப்படாது கரப்பை; அகன்ற பெரிய ஆகாயத்தின்கண்ணும் பகற்பொழுது விளங்குவை, பல கிரணங்களையும் பரப்பி - எ - று. மாறிவருதி (8) என்பதற்கு இராசிதோறும் மாறிவருதி யெனினுமமையும். வீங்குசெலன்மண்டிலமே! வரைதி; இறத்தி; வருதி; ஒளித்தி; நீ விசும்பினானும் பகல் விளங்குதி; இக்குறைபாடெல்லாமுடைய நீ சேரலாதனை யாங்கன மொத்தியோவெனக் கூட்டி வினைமுடிவுசெய்க. ஒழுகவென்னுமெச்சம் (1) நுகருமென ஒருசொல் வருவித்து அதனோடு கூட்டி முடிக்கப்பட்டது; ஒழுகவும் போகம் நுகரவும் வேண்டியெனினும் அமையும். வேண்டி, பொறாது, துரப்ப என நின்ற வினையெச்சங்கள் ஒடுங்காவென்னும் பெயரெச்சமறையின் முதனிலையோடு முடிந்தன. இனி, ‘பகல்விளங்கலை‘ என்னும் பாடத்திற்குத் திங்கண்மண்டிலமாக்கி, ‘மாறிவருதி’ என்பதற்குத் தேய்ந்தும் வளர்ந்தும் வருதியெனவும் பிறவும் அதற்கேற்ப வுரைப்ப. (உரைப்பவர் இளம்பூரணர்) (9) ஆவு மானியற் பார்ப்பன மாக்களும் பெண்டிரும் பிணியுடை யீரும் பேணித் தென்புல வாழ்நர்க் கருங்கட னிறுக்கும் பொன்போற் புதல்வர்ப் பெறாஅ தீரும் எம்மம்பு கடிவிடுது நும்மரண் சேர்மினென அறத்தாறு நுவலும் பூட்கை மறத்திற் கொல்களிற்று மீமிசைக் கொடிவிசும்பு நிழற்றும் எங்கோ வாழிய குடுமி தங்கோச் செந்நீர்ப் பசும்பொன் வயிரியர்க் கீத்த முந்நீர் விழவி னெடியோன் நன்னீர்ப் பஃறுளி மணலினும் பலவே. திணையும் துறையும் அவை. (பாடாண்திணை, இயன்மொழி) பாண்டி |