களத்து வந்தோர் யாவரும் பரிசில் பெற்றார்கள்; ஈண்டு நின்னோடு எதிர்ந்து பட்டோரில்லாமையான், எனக்கு உணவாகிய தசை பெற்றிலேன்‘ எனத் தான் பேய்மகளானமை தோன்றப் பரிசில்கடாயினாளெனவுங் கூறுவாருமுளர். |
‘பாடினிக்கு,.....பாண்மகன்’ என்பது, ‘அதுவெனுருபுகெடக் குகரம் வந்தது; உயர்திணையாகலின். பாடினிபாடலுக்கேற்பக் கொளைவல் பாண்மகனெனினும் அமையும். எனவும், ஆங்கும் : அசைநிலை; பெற்றிசின் மூன்றும் படர்க்கைக்கண் வந்தன. |
| (12) | பாணர் தாமரை மலையவும் புலவர் |
| பூநுதல் யானையொடு புனைதேர் பண்ணவும் |
| அறனோ மற்றிது விறன்மாண் குடுமி |
| இன்னா வாகப் பிறர்மண்கொண் |
| டினிய செய்திநின் னார்வலர் முகத்தே. |
திணை - அது; துறை - இயன்மொழி. (பாடாண்டிணை)
|
பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியை நெட்டிமையார் பாடியது. |
(இ - ள்.) பாணர் பொற்றாமரைப் பூவைச் சூடவும், புலவர் பட்டம் பொலிந்த மத்தகத்தையுடைய யானையுடனே அலங்கரிக்கப்பட்ட தேரினை ஏறுதற்கேற்ப அமைக்கவும், அறனோ இவ்வாறு செய்தல்? வென்றி மாட்சிமைப்பட்ட குடுமி! வேற்றரசருடைய நிலத்தை அவர்க்கு இன்னாவாகக் கொண்டு நின்னுடைய பரிசிலரிடத்து இனியவற்றைச் செய்வை - எ - று. |
குடுமி! பிறர்மண் இன்னாவாகக்கொண்டு, மலையவும் பண்ணவும் நின் ஆர்வலர் முகத்து இனியசெய்வை; இது |
 |