சொல்லுவாயாகவெனக் கூட்டி வினைமுடிவு செய்க. |
மற்று : அசைநிலை. |
இது பழித்ததுபோலப் புகழ்ந்ததாகக் கொள்க. |
| (13) | இவனியா ரென்குவை யாயி னிவனே |
| புலிநிறக் கவசம் பூம்பொறி சிதைய |
| எய்கணை கிழித்த பகட்டெழின் மார்பின் |
| மறலி யன்ன களிற்றுமிசை யோனே |
| களிறே, முந்நீர் வழங்கு நாவாய் போலவும் |
| பன்மீ னாப்பட் டிங்கள் போலவும் |
| சுறவினத் தன்ன வாளோர் மொய்ப்ப |
| மரீஇயோ ரறியாது மைந்துபட் டன்றே |
| நோயில னாகிப் பெயர்கதி லம்ம |
| பழன மஞ்ஞை யுகுத்த பீலி |
| கழனி யுழவர் சூட்டொடு தொகுக்கும் |
| கொழுமீன் விளைந்த கள்ளின் |
| விழுநீர் வேலி நாடுகிழ வோனே. |
திணை - பாடாண்டிணை; துறை - வாழ்த்தியல். |
சோழன் முடித்தலைக்கோப்பெருநற்கிள்ளி கருவூரிடஞ் செல்வானைக் கண்டு சேரமானந்துவஞ்சேரலிரும்பொறையொடு வேண்மாடத்து மேலிருந்து உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் பாடியது. |
(இ - ள்.) இவன் யாரென்று வினவுவாயாயின், இவன்றான், புலியினது தோலாற் செய்யப்பட்ட மெய்புகுகருவி பொலிந்த கொளுத்தற எய்த அம்புகள் போழப்பட்ட பரந்துயர்ந்த மார்பினையுடைய கூற்றம் போன்ற களிற்றின்மேலோன்; இக்களிறுதான், கடலின்கண்ணே இயங்கும் |
 |