முன்னிலைப் பெயரோடு ஆவும் பார்ப்பனமாக்களும் பெண்டிருமென்னும் படர்க்கைப் பெயர்கள் விராய்வந்து, நும்மரண் சேர்மினென்னும் முன்னிலைவினையான் முடிதல், ‘‘செய்யுண் மருங்கினும் வழக்கியன் மருங்கினும்’’ என்னும் அதிகாரப்புறனடையாற் கொள்ளப்படும். (10) வழிபடு வோரை வல்லறி தீயே பிறர்பழி கூறுவோர் மொழிதே றலையே நீமெய் கண்ட தீமை காணின் ஒப்ப நாடி யத்தக வொறுத்தி வந்தடி பொருந்தி முந்தை நிற்பிற் றண்டமுந் தணிதிநீ பண்டையிற் பெரிதே அமிழ்தட் டானாக் கமழ்குய் யடிசில் வருநர்க்கு வரையா வசையில் வாழ்க்கை மகளிர் மலைத்த லல்லது மள்ளர் மலைத்தல் போகிய சிலைத்தார் மார்ப செய்திரங் காவினைச் சேண்விளங் கும்புகழ் நெய்தலங் கான னெடியோய் எய்தவந் தனம்யா மேத்துகம் பலவே. திணையும் துறையும் அவை. (பாடாண்டிணை, இயன்மொழி) சோழன் நெய்தலங்கானல் இளஞ்சேட் சென்னியை ஊன்பொதி பசுங்குடையார் பாடியது. (இ - ள்.) நின்னை வழிபட்டொழுகுவோரை விரையஅறிவை; பிறருடைய குற்றஞ்சொல்லுவாரது வார்த்தையைத் தெளிவாய்; நீ மெய்யாக மனத்தான் ஆராய்ந்து அறுதியிடப்பட்ட கொடுமையை ஒருவன்பாற் காணின், அதனை நீதிநூற்குத் தக ஆராய்ந்து அத்தீமைக்குத் தகத் தண்டஞ்செய்வை; வந்து நின்பாதத்தை யடைந்து முன்னே நிற்பாராயின், அவர் பிழைசெய்வதற்குமுன் நீ செய்யும் அருளினும் அருள் பெரிதாக அவரைச்செய்யுந் தண்டமும் |