உண்ண உண்ண அமையாத மணங்கமழும் தாளிப்பையுடைய அடிசிலை விருந்தினர்க்கு மிகுதி குறைபடாமல் வழங்கும் பழிதீர்ந்த மனைவாழ்க்கையையுடைய பெண்டிர் முயக்கத்தால் மாறுபடுத்தலல்லது வீரர் போரால் மாறுபடுத்தலொழிந்த இந்திரவிற்போலும் மாலையையுடைய மார்ப! ஒரு தொழிலைச் செய்து பின் பிழைக்கச்செய்தே மென்று கருதாத செய்கையையும் சேய்மைக்கண்ணே விளங்கும் புகழினையுமுடைய நெய்தலங்கானலென்னும் ஊரையுடைய நெடியோய்! அணுகவந்தேம் யாம்; நின் பலகுணங்களையும் புகழ்வேமாக. - எ - று. வழிபடுவோரை வல்லறிதியென்றது, அறிந்து அவர்களுக்கு அருள் செய்வையென்பதாம். பெரிது (6) என்பது வினையெச்சக் குறிப்பாகலின், ஆகவென ஒரு சொல் வருவித்து உரைக்கப்பட்டது. பண்டையிற்பெரிது தணிதியென்பதற்கு நீ பண்டு செய்த கோபத்தினும் பெரிதாகத் தணிதியென்றுரைப்பினும் அமையும். அடப்பட்டமையாக அமிழ்துபோலும் அடிசில் (7) என்றுரைப்பினும் அமையும். நெடியோய்! பல ஏத்துவேமாக எய்தவந்தனமெனக்கூட்டுக.
(11) அரிமயிர்த் திரண்முன்கை
வாலிழை மடமங்கையர்
வரிமணற் புனைபாவைக்குக்
குலவுச்சினைப் பூக்கொய்து
தண்பொருநைப் புனல்பாயும்
விண்பொருபுகழ் விறல்வஞ்சிப்
பாடல்சான்ற விறல்வேந்தனும்மே
வெப்புடைய வரண்கடந்து
துப்புறுவர் புறம்பெற்றிசினே
புறம்பெற்ற வயவேந்தன்
மறம்பாடிய பாடினியும்மே
ஏருடைய விழுக்கழஞ்சிற்
சீருடைய விழைபெற்றிசினே
இழைபெற்ற பாடினிக்குக்
குரல்புணர்சீர்க் கொளைவல்பாண் மகனும்மே
எனவாங்
கொள்ளழல் புரிந்த தாமரை
|