மரக் கலத்தையொப்பவும் பலமீனினது நடுவே செல்லும் மதியத்தை யொப்பவும் சுறவினத்தையொத்த வாண்மறவர் சூழத் தன்னை மருவிய பாகரை யறியாது மதம்பட்டது; இவன் நோயின்றிப் பெயர்வானாக; வயலிடத்து மயிலுதிர்த்த பீலியை ஆண்டுள்ள உழவர் நெற்சூட்டுடனே திரட்டும் கொழுவிய மீனையும் விளைந்த கள்ளையுமுடைய மிக்க நீராகிய வேலியையுடைய நாட்டையுடையோன் - எ - று. களிற்றுமிசையோனாகிய இவன் யாரென்குவையாயின், நாடுகிழவோன்; இவன் களிறு மதம்பட்டது; அதனால், இவன் நோயின்றிப் பெயர்கவெனக் கூட்டி வினைமுடிவு செய்க. களிற்றுக்கு நாவாயோடு உவமை எதிர்ப்படையைக் கிழித்தோடலும், திங்களோடு உவமை வாளோர் சூழத் தன் தலைமைதோன்றச் செல்லுதலுமாகக் கொள்க. தில் : விழைவின்கண் நின்றது. பெருநற்கிள்ளி களிறு கையிகந்து பகையகத்துப் புகுந்தமையான் அவற்குத் தீங்குறுமென்று அஞ்சி வாழ்த்தினமையால், இது வாழ்த்தியலாயிற்று; இவற்குத் தீங்குறின் நமக்குத் தீங்குறுமென்னுங் கருத்தால் நோயிலனாகிப் பெயர்கவென்றாராயின், வாழ்த்தியலாகாது; துறை, பாட்டுடையானது என்றுணர்க. (14) கடுங்கண்ண கொல்களிற்றாற் காப்புடைய வெழுமுருக்கிப் பொன்னியற் புனைதோட்டியான் முன்புதுரந்து சமந்தாங்கவும் பாருடைத்த குண்டகழி நீரழுவ நிவப்புக்குறித்து நிமிர்பரிய மாதாங்கவும் ஆவஞ் சேர்ந்த புறத்தை தேர்மிசைச் சாவ நோன்ஞாண் வடுக்கொள வழங்கவும் பரிசிலர்க் கருங்கல நல்கவுங் குரிசில் வலிய வாகுநின் |